அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள  வைத்தியசாலை ஒன்றுக்குள புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். 
சுமார்  4 முதல் 5 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் மர்ம நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

குறித்த வைத்தியசாலைக்குள் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் தீவிர ஆய்வு செய்தனர். 
குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என  இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 
மர்ம நபர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு சற்று பதற்றம் தணிந்துள்ளது.