நாட்டில் தற்போது வன்முறையுடன் கூடிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் சமூகவலைத்தளம்  வாயிலாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குமார் சங்கக்காரவின் டுவிட்டர் பதிவில்,

“இலங்கை மக்களே ஒன்று சேருங்கள் என்றும் , கண்களை திறக்க வேண்டும் என்றும் , வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும் என மக்களுக்கு டுவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ள பதிவில்  சமாதானமாக இருங்கள் , மற்றவர்களையும் பாதுகாப்பாக வையுங்கள் , பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் என சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மஹேலா ஜெயவர்தனவின் இன்ஸ்டாகிராம் பதிவில்,

அதில், அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷயங்களில் நாம் சிக்கி கொள்ளக்கூடாது, வன்முறையை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் தீவிரவாதி தான், நாடு வீழவேண்டும் என அவர்கள் விரும்புவார்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர்  முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரத்னேவின் டுவிட்டர் பதிவில்,

அதில், இது நம் நாடு, தயவு செய்து இலங்கையை அழித்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் வெறுத்து கொண்டால் நாம் எப்போதும் வளர்ந்தநாடாக இருக்க முடியாது.

உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள், நம்முடைய எதிர்காலம் நம்முடைய தற்போதைய செயலில் தான் உள்ளது.

இனவெறிக்கு எதிராக நிற்போம் என பதிவிட்டுள்ளார்.