ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் 9 ஆம் இடத்திலுள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸுடன் மோதிய செப்பிய வீரர் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்டெபனாஸை வீழ்த்தி சம்பியனார்.

இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக மாட்ரிக் ஓபன் கிண்ணத்தை முத்தமிட்டார். முன்னதாக அவர் 2011 மற்றும் 2016 இல் இங்கு பட்டம் வென்றிருந்தார். 

இந்த வெற்றியின் மூலமாக, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து டென்னிஸ் தொடர்களில் தனது 33 ஆவது பட்டத்தை கைப்பற்றி ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார்.