வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை கைது  செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா,ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது. 

இதன்போது குறித்த ஹாட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.