இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று பாகிஸ்தான் நாட்டு வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.