ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மகன் தஹம் சிறி­சே­னவின் திரு­மண நிகழ்வில் பங்­கேற்­ற­வர்கள், கைத்­தொ­லை­பே­சி­களை வைத்­தி­ருக்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மகன் தஹம் சிறி­சே­ன­வுக்கும், பிர­பல தொழி­ல­திபர் அதுல வீர­ரத்­னவின் மகள் நிபு­ணிக்கும், கடந்த வியாழக்­கி­ழமை கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் திரு­மணம் இடம்­பெற்­றது.

முன்­ன­தாக ஷங்­ரி-லா ஹோட்­ட­லி­லேயே நடக்­க­வி­ருந்த இந்த திரு­மணம், அங்கு குண்­டு­வெ­டிப்பு நிகழ்ந்­ததை அடுத்து, ஹில்டன் ஹோட்­ட­லுக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த திரு­மண நிகழ்வில் குடும்ப உறுப்­பி­னர்கள் மட்­டுமே பங்­கேற்­றனர். அர­சி­யல்­வா­திகள் எவரும் அழைக்­கப்­ப­ட­வில்லை.

திரு­ம­ணத்­துக்கு வந்­தி­ருந்­த­வர்­க­ளிடம் இருந்து, ஹோட்­டலின் மண்­ட­பத்­துக்குள் நுழைய முன்­னரே, கைத்­தொ­லை­பே­சி­களை ஒப்­ப­டைத்து விட்டு செல்­லு­மாறு கேட்­கப்­பட்­டனர். இதன் கார­ண­மாக திரு­மணம் தொடர்­பான எந்­த­வொரு படங்­களும் சமூக ஊட­கங்­க­ளிலோ, ஊட­கங்­க­ளிலோ வெளி­யா­க­வில்லை. படங்கள் வெளி­யா­வதை தடுப்­ப­தற்­கா­கவே, இவ்­வாறு  தொலை­பேசிகள் திரு­மண மண்­ட­பத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.

அதே­வேளை திரு­ம­ணத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான படையினர் ஹில்டன் ஹோட்டலைச்சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். சாதாரண உடையிலும் ஏராளமான படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.