நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து மீண்டும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளது.

குறிப்பாக வட்ஸ் அப், வைபர், பேஸ்புக், ஐ.எம்.ஒ., செனப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை உடன் அமுலாகும் வரையில் மறு அறிவித்தல் வரை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளது.

இதேவேளை, குறித்த சமூக ஊடகங்களின் முடக்கம் தற்காலிகமானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட பின்னூட்டத்தால் சிலாபம் நகரில் கலவரம் ஏற்பட்ட நிலையில் அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இனங்களுக்கிடையில் முறுகலை தேற்றுவித்ததன் குற்றச்சாட்டில் பேஸ்புக்கில் பின்னூட்டம் செய்தவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.