பொதுவாக எம்மில் பலருக்கும் இந்த தண்ணீரை குடிப்பது குறித்து ஏராளமான சந்தேகங்களை வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆறு லீற்றர் தண்ணீர் அருந்தவேண்டும் என்று மருத்துவர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களோ உங்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தண்ணீரை குடித்தால் போதுமானது என்பார்கள். வேறு சிலர் உங்கள் உடலிலிருந்து தினசரி மூன்று லீற்றர் சிறுநீர் வெளியேறவேண்டும் அதற்கேற்றாற் போல் தண்ணீரை அருந்துங்கள் என்பர்.
ஆனால் உண்மையில் எம்முடைய உடலுக்கு தண்ணீர் தேவையெனில் தாகம் எடுத்து எம்மிடமே கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. அதற்காக லீற்றர் லீற்றராக தண்ணீர் குடிக்கத் தேவையில்லை. இதே சமயத்தில் தாகமே எடுக்கவில்லை என்று யாராவது சொல்வாரேயானால் அவர் களுக்கு கபம் அதிகரிக்கிறது என்று பொருள்.
உடலியல் தேவையை விட அதிகமான தண்ணீர் அருந்தினால் செரிமானத்தில் சிக்கல் எழலாம். காரணம் வயிற்றில் உணவுப் பொருள் ஜீரணமாவதற்கு அக்னி தேவை. அதனை தண்ணீர் அருந்தி பலவீனமடைய வைத்து விடாதீர்கள்.
அதே போல் தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் இருந்தால், அவர்களின் உட லில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும் இதனால் சரும வறட்சி, தோல் சுருக்கம்,முடி உதிர்தல், கண்களுக்கு அருகே கருவளையம், கால் பாதங்களில் வெடிப்பு போன்றவைத் தோன்றக்கூடும்.
ஒரு சிலர் காலையில் எழுந்ததும் ஒரு குவளைத் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்த முடித்த பின்னரே அவர்களுக்கு காலை கடன்கள் முடிக்க பாத்ரூமிற்குள் செல்வர்.
இதனை பழக்கப்படுத்திக் கொண்டுவிட் டால் அவர்களின் உடலில் கழிவை அகற்று வதற்காக இயற்கையாக சுரக்கவேண்டிய வாயுவின் உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம்.
இந்நிலையில் பலருக்கு மற்றொரு சந்தேகம் இருக்கிறது. வெந்நீர் நல்லதா? அல்லது சாதாரணத் தண்ணீர் நல்லதா? அல்லது மினரல் வாட்டர் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் தண்ணீர் நல்லதா? என்பதே.
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு கோப்பை வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத் தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும். உணவும் செரித்து விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்க முடிய வில்லை என்றால், ஒரு கோப்பை வெந்நீரை உடனே குடியுங்கள். மலப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். ஆனால் இதனை பழக்கப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை, குறையவும் வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால், இதயத்துக்கு மிகவும் நல்லது.
ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது. வீட்டில் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கிய மாக மாறிவிடும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.
வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால், கால் பாதங்கள் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது, பெரிய பிளாஸ்ரிக் வாளி யில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் அதில் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி குறையும்.
அதே போல் மூக்கு அடைப்பு ஏற்பட்டால் அதற்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.
அதே போல் சந்தையில் கிடைக்கும் மினரல் வாட்டர் போத்தல்களை பயன்படுத்த வேண்டாம். இதில் சத்து ஏதும் இல்லை என்று நிரூபணமாகியிருக்கிறது.
அதற்கு பதிலாக நிலத்தடி நீரை நன்றாக கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலை யில் குடிப்பதே சிறந்தது.
அதே சமயத்தில் ஒரு சிலர் கோப்பையில் சிறிதளவு வெந்நீரை எடுத்துக்கொண்டு, அதில் தேவையாள அளவிற்கு சாதாரண தண்ணீரை கலந்து பருகுவர். இதனை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இப்படி கலப்பதால் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. மாறாக இத்தகைய தண்ணீரை அருந்தினால் நோய் தொற்றும் ஏற்படக்கூடும்.
டாக்டர். அருணா
ஊட்டச்சத்து நிபுணர்
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM