ஆப்கானிஸ்தானில் முன்னள் பத்திரிகையாளரும், அரச ஆலோசகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் காபூலில் உள்ள மேனா மங்கலின் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவேளையிலேயே மர்ம நபர்கள் சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மேனா மங்கல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள நெருக்கடியை அறிவிப்பதன் மூலம் பிரபல்யமானார்.

அது மாத்திரமல்லாமல் சட்டத்தரணியாகவும் கடமையாற்றி, பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காக சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார்.  

மேலும் பத்திரிகை துறையில் இருந்து விலகிய மேனா மங்கல், அந்நாட்டு பாராளுமன்றத்தின் கலாசார ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது.