ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் இந்திய ரூபாவில் 28 கோடியும் 2 ஆவது இடம்பெறும் அணிக்கு இந்திய ரூபாவில் 14 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந் நிலையில் இன்று ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. 

தண்ணீர் பாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் மைதானதுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சுமார் 3 ஆயிரம் பொலிஸார் மைதானத்தின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுமுள்ளனர்.

அத்துடன் மைதானத்தை சுற்றி உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுமுள்ளன.