(செ.தேன்மொழி)

அம்பலங்கொடை பகுதியினை அண்மித்த  கடற்பகுதியில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் கடற்படையினர் படகில் சென்ற 10 மீனவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.

தெற்கு கடற்படை அம்பலங்கொடைக்கு அண்மித்த கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைளின் போது மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக கடற்படை தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட கடற்படையினர் மீனவர்கள் பத்து பேரையும் உயிருடன் மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஹிக்கடுவை மீன்பிடிதுறைமுகத்தில் புறப்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரியிவந்துள்ளது. காலி களங்கரை விளக்கிலிருந்து 20 கடல் மையில் தொலைவிலேயே குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.