வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்குள் உள்ள உணவக மேசை ஓன்றில் வைத்தியசாலை பணிப்பாளரின் முகவரியிடப்பட்ட கடிதமொன்று காணப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் கடிதத்தை  அவதானித்த வைத்தியசாலையில் கடமை புரியும் பணியாளர் ஒருவர் அதனை பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த கடிதம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.