தலவாக்கலை நகரிலிருந்து டயகம நோக்கி செல்ல முற்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறமுற்பட்ட ஒருவர் தவறி கீழே வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த விபத்தானது நேற்று மாலை 6.00 மணியளவில் தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பஸ்ஸிலிருந்து வீழ்ந்ததமையினால் பஸ்ஸின் முன்பக்க சக்கரம் அவர் காலில் ஏறியுள்ளது. இதனால் கால்கள் முறிந்த நிலையில் அவர் உடடினாயக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்தும் அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்ததுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.