சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி குறித்து சரத்பொன்சேகாவின் நிலைப்பாடு 

Published By: Digital Desk 3

11 May, 2019 | 04:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி  தனக்கு கிடைக்குமா என்று உறுதியாக குறிப்பிட முடியாது.  திறமைக்கு பொருந்தும்  அமைச்சுக்களை  வழங்க  வேண்டும்  என்பதே எனது நிலைப்பாடு, பிறிதொரு அமைச்சு பதவியை  வழங்கி   தேசிய  பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக  நியமிக்கும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.  எனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளேன்.  எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கு அமைச்சினை  தவிர்த்து  பிறிதொரு  அமைச்சினை  ஒருபோதும் ஏற்க  மாட்டேன் என பாராளுமன்ற  உறுப்பினர்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன்  பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தீவிரவாத தாக்குதலை  அரசாங்கம்  குறிப்பிடுவது போன்று குறுகிய காலத்திற்குள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. பாதுகாப்பு  துறை  சார் விடயங்கள் அரசியல்வாதிகளுக்கு  தெரியாது. சிலர் பேச்சளவில் மாத்திரமே கருத்துரைக்கின்றார்கள். தேசிய   பாதுகாப்பு தொடர்பில்    புரிந்துக் கொள்வதற்கும்,   செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் முறையான  பின்புலம்  அவசியம்.

பாடசாலையின்  கற்றல் செயற்பாடுகளை மீள  ஆரம்பிப்பது  இன்று   பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  பாதுகாப்பை  முறையாக  பலப்படுத்தியதுடன்,  கற்றல் செயற்பாடுகள் இடம்  பெறுவதும் அவசியம்,  யுத்தக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட  பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது காணப்படுவது கிடையாது.   பல விடயங்களில்   தாமத  நிலை காணப்படுகின்றது.   இதற்கு  பல்வேறு  அரசியல்  காரணிகள் செல்வாக்கு செலுத்து கின்றன என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01