சுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவர் கைது : பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு

By Daya

11 May, 2019 | 12:17 PM
image

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட மூன்று சந்தேகநபர்களை வெலிமடைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீட்டிற்கு அடியிலிருந்த சுரங்க அறையிலிருந்து குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் போகாகும்பரை என்ற இடத்தில் முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர். 

போகாகும்பரை  மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறிப்பிட்ட வீடு இன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த வீட்டின்  படுக்கையறையின் வீட்டின் தரையில் சுரங்க அறையொன்று அமைக்கப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 பொலிசாஸாரும், இராணுவத்தினரும் இச் சுரங்க அறையைக் கண்டுபிடித்து, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட இம் மூவரும், பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தேடப்பட்டு வந்தவர்களென்று ஆரம்பகட்ட  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரும், இராணுவத்தினராலும் கைதுசெய்யப்பட்ட மூவர் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறிப்பிட்ட சுரங்க அறையிலோ, வீட்டிற்குள்ளோ எவ்வித பயங்கரவாதப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸாரும், இராணுவத்தினரும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23