ஒரு கூட்­டாண்மை வர்த்­தக சின்னம் என்ற வகையில் கொமர்ஷல் வங்­கியின் ஸ்திர நிலை சர்­வ­தேச அரங்கில் மேலும் ஒரு அங்­கீ­கா­ரத்தை வென்­றுள்­ளது. அண்­மையில் வர்த்­தக சின்­ன­மிடல் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் என்­ப­ன­வற்­றுக்­காக மலே­ஷியா கோலாலம்­பூரில் இடம்­பெற்ற 2016 CMO ஆசிய விருது வழங்கும் வைப­வத்தில் ஆண்­டுக்­கான சந்­தைப்­ப­டுத்தல் பிர­சார விருது கொமர்ஷல் வங்­கிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கீர்த்­தி­மிக்க இந்த விருதின் மூலம் இலங்­கையின் மிகப் பெரிய தனியார் வங்கி இலங்­கை­யிலும் ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­திலும் மிக உறு­தி­யான ஓர் வர்த்­தக முத்­திரை என்ற நிலையை தக்­க­வைத்­துள்­ளது. கொமர்ஷல் வங்­கிக்கு வழங்­கப்­பட்ட இந்த விரு­தா­னது அந்த வகை சார்ந்த பிரிவில் வழங்­கப்­பட்ட ஒரே­யொரு விருது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.வரு­டத்­துக்­கான சந்­தைப்­ப­டுத்தல் பிர­சார விருது வங்­கியின் கவர்ச்­சி­மிக்க கூட்­டாண்மை பிர­சார தொனிப் பொரு­ளுக்­காக வழங்­கப்­பட்­டுள்­ளது. இது பல்­வேறு பிரி­வு­களை இலக்கு வைத்து உரு­வாக்­கப்­பட்­டது. வாடிக்­கை­யா­ளர்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு வலு­வூட்­டு­வதை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட உங்கள் வெற்றிக்கான வங்கி என்பதே அந்தத் தொனிப் பொருளாகும்.

வங்­கியின் சந்­தைப்­ப­டுத்தல் முயற்­சிகள் அதி உயர் நிலைக்­கான அர்ப்­ப­ணத்­தோடு கட்டி எழுப்­பப்­பட்­டுள்­ளன என்­பதை மேலும் உறுதி செய்­வ­தா­கவும் இந்த விருது அமைந்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­களின் வாழ்க்­கையில் மிக முக்­கி­ய­மான மைல்­கற்­களை அவர்கள் கடக்­கின்ற போது ஒரு பங்­காளி என்ற வகையில் வங்கி எந்­த­ளவு முக்­கி­ய­மான பங்­கினை செலுத்­தி­யுள்­ளது என்­ப­தையும் அவர்­களின் பாரிய வெற்­றி­க­ளுக்கு எந்­த­ளவு வங்கி உத­வி­களை வழங்­கி­யுள்­ளது என்­ப­தையும் அவர்­க­ளது சிந்தனைகளில் மீளப் பதிவதை இது மேலும் உறுதி செய்துள்ளது.