இப்­போ­துள்ள அர­சியல் பல­வீனத் தன்­மை­யிலும், தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்­த­லிலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் 20 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வர முடி­யாது. ஆகவே முதலில் பல­மான அர­சாங்கம் ஒன்­றினை அமைத்து தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே  நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்க முடியும் என நம்­பு­கின்றோம். அதேபோல் புதிய அர­சியல் அமைப்­பொன்று உரு­வா­வதும் இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அவ­ரு­ட­னான செவ்வி முழு­மை­யாக, 

கடந்த காலங்­களில் இருந்து எமது நாட்டில் அள­வுக்கு அதி­க­மாக இரத்தம் படிந்­துள்­ளது. பல தசாப்த கால­மாக போராட்­டங்­களை பார்த்­து­விட்டோம். அவற்றில் அழி­வு­களை சந்­தித்­து­விட்டோம். அவ்­வாறு  இருக்­கையில் எந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருந்­தாலும்  இன்­னொரு இன­வாத முரண்­பாட்­டுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. ஆனால்   இவ்­வா­றான சம்­ப­வங்­களை தடுப்­பதில் அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன. இப்­போது நாட்டில் இடம்­பெற்­றுள்ள இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து அர­சியல் கட்­சிகள் அதனை எவ்­வாறு தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றன  என்­பதை கடந்த இரண்டு வாரங்­க­ளாக அவ­தா­னிக்க முடிந்­தது. அனை­வ­ருமே இதில் தமது அர­சியலுக்காவே முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் ஜே.வி.பி. இதனை எப்­போ­துமே அர­சி­ய­லாக கையில் எடுக்கப் பார்க்­க­வில்லை. மக்­களை பாது­காத்து முதலில் இந்த நிலை­மை­களில் இருந்து மீளவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். அதற்­காக சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி முதலில் மக்­களை அமை­திப்­ப­டுத்தும் வேலை­யினை செய்து வரு­கின்றோம். கிறிஸ்­தவ மத தலை­வர்­களை சந்­தித்து பேசினோம். இஸ்­லா­மிய மத தலை­வர்­களை சந்­தித்தும் பேசினோம். இரண்டு சமு­கங்­களை மோத­விடும் அர­சியல் எமக்கு வேண்டாம். 

கேள்வி:-  இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலை தடுத்­தி­ருக்க முடிந்தும் பாது­காப்பு தரப்பின் பல­வீ­னமே காரணம் எனவும் பாது­காப்பு தரப்பின் ஒரு­சிலர் மீது பழி­சு­மத்­தப்­பட்­டுள்­ளது, இது குறித்து நீங்கள் என்ன நினைக்­கின்­றீர்கள்?

பதில்:- உண்­மையில் இந்த விட­யத்தில் அர­சாங்­க­மாக அனை­வ­ருமே பொறுப்­பா­ளிகள். தேசிய பாது­காப்பு விட­யத்தில் மட்­டு­மல்ல சகல கார­ணி­க­ளிலும் அர­சாங்­கத்­துக்குள் அதி­கார போராட்டம் ஒன்று உள்­ளது. ஜனா­தி­பதி- பிர­தமர் இரு­வரும் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்தே இரு­வ­ருக்கும் எதி­ரா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர். இதன் உச்­சக்­கட்­ட­மாக  கடந்த ஆண்டு ஒக்­டோபர் 26 ஆம் திகதி அர­சியல் சூழ்ச்­சியை கூறலாம். இவர்கள் இரு­வ­ரி­டையில்  இருந்த அதி­கார போராட்டம் இறு­தியில் நீதி­மன்றம் வரையில் கொண்­டு­செல்­லப்­பட்டே முடி­வுக்கு வந்­தது. இவ்­வா­றான நிலையில் நாட்­டினை எவ்­வாறு இவர்கள் இரு­வ­ராலும் சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல முடியும். இந்த அரா­ஜக நிலை­மையே தேசிய பாது­காப்பு வரையில் பாதித்­தது. ஜனா­தி­பதி அவ­ரது பாது­காப்பு கூட்­டங்­களில் அர­சியல் நகர்­வு­க­ளையே கையாண்டார். பிர­தமர் எப்­போ­துமே வெள்­ளைக்­கா­ரர்­களை நம்­பியே ஆட்சி செய்­கின்றார். ஆகவே இந்த சம்­ப­வத்தில் பிர­தான இரண்டு குற்­ற­வா­ளிகள் ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ரு­மே­யாகும், அதன் பின்­னரே பாது­காப்பு செய­லாளர் பாது­காப்பு தரப்பு புல­னாய்வு தரப்பு என விரல்­நீட்ட முடியும். ஒட்­டு­மொத்­த­மாக அர­சாங்க மற்றும் பாது­காப்பு தரப்­பினர் குற்­ற­வா­ளிகள் தான். 

கேள்வி:- எனினும் கடந்த ஏப்ரல் 4 ஆம் திக­தியே இந்­திய புல­னாய்­வுத்­துறை இலங்­கையின் புல­னாய்­வு­த்து­றைக்கு இந்த தாக்­குதல் குறித்து அறி­வித்­த­தா­கவும் இந்த தாக்­குதல் குறித்து பாது­காப்பு தரப்பு நன்கு அறிந்­தி­ருந்­தது என்­பதும் அவ­ரவர் மூல­மா­கவே வெளி­வந்­துள்­ளதே? 

பதில்:- ஆம், அத­னையும் மறுக்க முடி­யாது, அனை­வ­ருக்கும் தெரிந்தே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. 

கேள்வி:- இவ்­வா­றான ஒரு சிறிய இஸ்­லா­மிய குழு குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே சில பெளத்த அமைப்­புகள் எச்­ச­ரித்து வந்­துள்­ளன. அப்­போ­தெல்லாம் குறித்த பெளத்த அமைப்­பு­மீது நீங்கள் அனை­வரும் இன­வாத குற்­றச்­சாட்டை முன்­வைத்­தீர்கள், ஏன் உங்­களால் அப்­போது இது­கு­றித்து அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை?

பதில்:- அப்­போது இந்த கார­ணிகள் கூறப்­பட்­டது உண்­மைதான்.அதேபோல் அளுத்­கம, பேரு­வளை, கண்டி கல­வ­ரங்கள் உரு­வாக்­கப்­பட்ட போது  சிங்­கள முஸ்லிம் கல­வரம் ஒன்று ஏற்­படும் என்ற பயம் மட்­டுமே எம்­மத்­தியில் இருந்­தது. ஒரு இன­வாதம் இன்­னொரு இன­வா­தத்தை உரு­வாக்கும் அச்சம் மட்­டுமே தென்­பட்­டது.சிங்­கள -முஸ்லிம் கல­வரம் சில மோச­மான நிலை­மை­களை உரு­வாக்கும் என்ற தூர­நோக்கு எமக்கு இருந்­தது.  ஆனால் அத­னையும் தாண்டி இவ்­வாறு தற்­கொலை தாக்­கு­தலை முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு சிலர் செய்­வார்கள் என சிறிதும் நினைத்­துப்­பார்க்­க­வில்லை. இதனை நாம் கவ­னிக்­க­வில்லை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். நாம் இதனை நினைத்­துப்­பார்க்­க­வில்லை என்­பதே உண்மை. 

கேள்வி:- இந்த தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக கைது­செய்­யப்­பட்­டுள்ள இப்­ராஹீம் என்ற நப­ருக்கும் உங்கள் கட்­சிக்கும் இடையில் எவ்­வா­றான உறவு இருந்­தது?

பதில்:- இப்­ரா­ஹீ­முக்கும் எமக்கும் 10 ஆண்­டு­க­ளுக்கும் மேலான தொடர்­புகள் இருந்­தது உண்­மைதான். இது அர­சியல் ரீதி­யாக மட்­டுமே இருந்­தது. குறிப்­பாக எமது கட்­சியின் தேசியப் பட்­டி­யலில் அவரை இணைத்து வைத்­தி­ருந்தோம். எம்மை பொறுத்­த­வரை எமது தரப்பில் தூய்­மை­யான நபர்­களை உள்­வாங்கும் கட்சி. ஆனால் இப்­ரா­ஹீமை நாம் நேர­டி­யான அர­சியல் களத்தில் கள­மி­றக்­க­வில்லை. இவர் ஒரு வியா­பாரி என்­பது தெரியும் நீண்­ட­கா­ல­மாக சகல தரப்­பி­னாலும் இவர் குறித்து நன்­ம­திப்பு சான்­றிதழ் வழங்­கப்­பட்­டது அதனை நம்­பியே நாமும் அர­சியல் உறவை வைத்­தி­ருந்தோம். அதனை தாண்டி எமக்கும் இவ­ருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. இப்­போது இந்த நபர் குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த விசா­ர­ணை­களில் நாம் எந்த தலை­யீ­டு­க­ளையும் செய்­ய­வில்லை. அவர்கள் எந்­த­மா­திரி நபர்கள் என்­பது எமக்கு தெரி­யாது. குற்­ற­வா­ளி­க­ளாக இருந்தால் அதற்­கான சகல தண்­ட­னையும் பெற்­று­கொ­டுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். 

கேள்வி:- எனினும் ஜே.வி.பியை சற்று மாறு­பட்ட அர­சியல் கொள்கை கொண்ட கட்­சி­யாக கூறும் நீங்கள் ஏன் உங்­களின் கட்­சிக்குள் ஒருத்­தரை உள்­வாங்­கும்­போதே அவர்கள் குறித்து ஆழ­மாக சிந்­திக்­க­வில்லை? 

பதில்:- 2015 ஆம் ஆண்டு அவரை தேசிய பட்­டி­யலில் உள்­வாங்கும் வரையில் அவர் குறித்து நன்­ம­திப்பே இருந்­தது. எமக்கு மட்டும் அல்ல சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும் இது தெரியும். ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த  ராஜபக் ஷ, அவ­ரது அமைச்­சர்கள், வியா­பார துறை­யினர் என அனை­வ­ருமே அவ­ருடன் நல்ல எண்­ணத்தை வைத்­தி­ருந்­தனர். ஆகவே அவரை நாம் கட்­சிக்குள் இணைத்­தமை குறித்து அப்­போது நாம் திருப்­தி­யா­கவே இருந்தோம். எமக்கு இந்த பின்­ன­ணிகள் எது­வுமே தெரி­ய­வில்லை. அவ­ரது குடும்ப விப­ரங்­களை நாம் ஆரா­ய­வில்லை. அதற்­கான அவ­சியம் எமக்கும் இருக்­க­வில்லை. 

கேள்வி:- நாட்டின் தற்­போ­தைய நிலை­மையில்  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை கொண்­டு­வரும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நீங்கள் ஏன் இதனை ஆதரிக்­க­வில்லை?

பதில்:- இந்த சட்­ட­மூலம் குறித்து பேசப்­பட்­டுள்­ளது. இதில் பயங்­க­ர­வாதம் குறித்த விளக்­கத்தில் பாரிய முரண்­பா­டுகள் உள்­ளன. சாதா­ரண போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள், தொழிற்­சங்க போராட்­டங்கள் கோரிக்­கைகள், மாண­வர்­களின் போராட்­டங்கள் என அனைத்­துமே பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் என்ற எண்­ணத்தை இந்த   சட்டம் உரு­வாக்­கி­யுள்­ளது. இப்­போது இந்த சந்­தர்ப்­பத்தை வைத்து தமது தேவை­களை நிறை­வேற்ற பிர­தமர் முயற்­சிக்­கின்றார். இப்­போது சட்­டத்தில் குறை­கூறும் இவர்கள் ஏன் தாக்­குதல் நடக்க முன்னர் இவை தெரிந்தும் வாய்­மூடி இருந்­தார்கள் ? இவர்­க­ளுக்கு வெள்­ளை­யர்­களின் சட்­டங்­களும் வேலைத்­திட்­டங்கள் மட்­டுமே தெரியும். அதனை நிறை­வேற்­றவே இந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. மாறாக இந்த நாட்டின், மக்­களின்   நலன்கள் குறித்து எந்த அக்­க­றையும் இல்லை. இந்த புதிய சட்டம் முழு­மை­யாக மேற்கு நாடு­களின் தேவைக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் நாட்­டுக்குள் முன்­னெ­டுக்கும் வேலை­திட்­டங்­களை மக்கள் எதிர்க்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக இந்த சட்­டத்தை உரு­வாக்­கு­கின்­றனர்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் இந்த செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் சர்­வ­தேச அர­சியல் சூழ்ச்­சிகள் உள்­ள­தாக நினை­கி­றீர்­களா ? 

பதில்:- ஆம், இன்று உலகில் பிர­தான மூன்று வியா­பா­ரங்கள் உள்­ளன. மருந்து, போதை­பொருள், ஆயுதம் இந்த மூன்­றுமே உலகை தீர்­மா­னிக்­கின்­றன. ஆயு­தங்­களை எடுத்­துக்­கொண்டால் எமது வல­யத்தில் எந்த நாடு­களும் பாரிய அள­வி­லான ஆயு­தங்­களை தயா­ரிப்­ப­தில்லை. உலகில் அதி நவீன ஆயு­தங்கள் மற்றும் அதி­க­ள­வி­லான ஆயு­தங்­களை மேற்கு நாடு­களே தயா­ரிக்­கின்­றன. இவர்­களின் சட்­ட­ரீ­தி­யான ஆயுத சந்தை இருப்­பதை போலவே சட்­ட­வி­ரோத சந்­தையும் உள்­ளது. அதேபோல் உலகில் எந்த பயங்­க­ர­வாத அமைப்பும் ஆயு­தங்­களை உற்­பத்தி செய்­வ­தில்லை. அப்­படி இருக்­கையில் இந்த பயங்­க­ரவா­திகள் கைகளில் எவ்­வாறு அதி­ந­வீன ஆயு­தங்கள் கிடைக்­கின்­றன.  இலங்­கை யில் விடு­த­லைப்­பு­லிகள் உரு­வாக்­கிய காலத்தில் அவர்­க­ளுக்கு எவ்­வாறு நவீன ஆயு­தங்கள் கிடைத்­தது? அர­சாங்­கமா கொடுத்­தது? இந்த ஆயு­தங்கள்  மேற்கு    நாடு­களில் இருந்தும் வல்­ல­ரசு  நாடு­களில் இருந்­துமே கொண்­டு­வ­ரப்­பட்­டன. மத்­தி­ய­கி­ழக்கில் இன்று செயற்­படும் இந்த இஸ்­லா­மிய குழுக்­க­ளுக்கும் மேற்கு நாடு­களே ஆயு­தங்­களை கொடுக்­கின்­றன. அதேபோல் மத்­தி­ய­கி­ழக்கில் இடம்­பெற்ற சகல போராட்­டங்­க­ளுக்கும் பின்­ன­ணியில் எண்ணெய் சண்­டையே இருந்­துள்­ளது. அதேபோல் ஒரு­சி­ல­நா­டுகள் தமது ஆட்­சியை தக்­க­வைக்க உல­கிற்கு ஆயு­தங்­களை கொடுக்­கின்­றன. இலங்­கையில் இடம்­பெற்ற தாக்­கு­தலும் சர்­வ­தேச அர­சியல் போட்­டியே. ஆனால் இலங்­கைக்குள் இதனை கையாள எமது நாட்­டுக்குள் இருக்கும் பல­வீ­னங்­களை அவர்கள் பயன்­ப­டுத்­தி­க்கொண்­டுள்­ளனர். இந்த நாட்டில் இருந்த அர­சியல் மற்றும் பாது­காப்பு பல­வீ­னமும் மக்கள் மீதான மக்­களின் அவ­நம்­பிக்கை இன­வாதம் என்­ப­வற்றை அனை­வரும் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். 

கேள்வி:- நாட்டின் தற்­போ­தைய சூழலில் நீங்கள் கொண்­டு­வர முயற்­சிக்கும் 20ஆம் திருத்­தம் என்­ன­வாகும்?

பதில்:- இப்­போ­துள்ள நிலையில் 20 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வது சாத்­தியம் இல்லை. முதலில் தேர்தல் ஒன்­றினை நடத்தி  பல­மான அர­சாங்கம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி அதன் பின்­னரே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க முடியும். அது­வ­ரையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை அவ­சி­ய­மில்லை  என்­பதே இப்­போது எமதும் நிலைப்­பாடு. புதிய அர­சியல் அமைப்பு குறித்தும் அதன் பின்­னரே சிந்­திக்க முடியும். முதலில் பல­மான அர­சாங்கம் ஒன்று உரு­வாக்க வேண்டும். 

கேள்வி:- தேர்தல் என்றால் முதலில் ஜனா­தி­பதி தேர்­தலா அல்­லது பொதுத் தேர்தலா நடக்கும் என நினைக்­கின்­றீர்களா?

பதில்:- முதலில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் பிர­தான கட்­சிகள் உள்­ளன. ஆனால் இப்­போ­துள்ள நிலையில் முதலில் பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்தி பல­மான அர­சாங்கம் ஒன்­றினை அமைக்க வேண்டும். அதற்­கான வாய்ப்­புகள்  இல்­லை­யென்றால் இந்த ஆண்டு இறு­திக்குள் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தி­யாக வேண்டும். மக்­க­ளுக்கு தீர்­மானம் ஒன்­றினை எடுக்க இட­ம­ளிக்க வேண்டும். 

கேள்வி:- இந்த தேர்­தல்­களில் பிர­தான கார­ணி­யாக மீண்டும் தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்­தலை கையில் எடுப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை,நீங்கள் எதனை கையில் எடுக்கப் போகி­றீர்கள்?

பதில்:- ஒவ்­வொரு ஆட்சிக் காலத்­திலும் அர­சாங்­கத்தை அமைத்­த­வர்கள் இது­வ­ரையில் யுத்­தத்தை வைத்தே அர­சியல் செய்­துள்­ளனர். இதனை தாண்டி மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் முழு­மை­யாக மறைக்­கப்­பட்டு யுத்தம் தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல் என்­பதே முன்­னு­ரிமை பெற்­றுள்­ளது. இப்­போதும்  அதே சூழலே உரு­வா­கி­யுள்­ளது. மீண்டும் பயங்­க­ர­வாதம் என்­பதை பிர­தான கட்­சிகள் கையில் எடுத்­துள்­ளது. ஆனால் நாம் இதனை மட்டும் அல்ல இந்த நாட்டின் ஊழல், குற்­றங்கள், பொரு­ளா­தார நெருக்­க­டிகள், இன­வாத அடக்­கு­முறை இவை அனைத்­தையும் மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றியே வாக்குக் கேட்­கின்றோம். இந்த நாட்டில் மூவின மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் வாக்­கு­று­தியை இவர்கள் எவ­ராலும் முன்­வைக்க முடி­யாது. ஆனால் நாம் தேசிய ஒற்­று­மையை உரு­வாக்கும் நோக்­கத்தில் முன்­வ­ரு­கின்றோம். 

கேள்வி:- ஜே.வி.பி.க்கு பிர­தான  இரண்டு கட்­சி­க­ளு­டனும் அர­சியல் செய்த அனு­பவம் உள்­ளது. இம்­முறை நீங்கள் எந்­தப்­பக்கம் ?

பதில் :- நாம் தெளி­வான நிலைப்­பாட்­டினை எடுத்­துள்ளோம். இந்த இரண்டு கட்­சி­களின்  கொள்­கை­களும் அர­சியல் நோக்­கமும் எமக்கு நன்­றா­கவே தெரியும். நல்­லாட்சி என்ற வெவ்­வேறு முகங்­களை வைத்­து­கொண்டு ஆட்­சிக்கு வந்த  இரண்டு கட்­சி­க­ளுக்கும் ஆட்­சியை சரி­யாக கொண்­டு செல்ல முடி­ய­வில்லை. ஆகவே இவர்­களை இனியும் அதி­கா­ரத்தில் வைத்­தி­ருக்க முடி­யாது. எனவே தான் நாம் புதிய தலை­மைத்­து­வத்தை உரு­வாக்கும் முயற்­சியை பொறுப்பை கையில் எடுத்­துள்ளோம். இதற்­கான மக்கள் மையம் ஒன்­றினை அமைக்­கவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். இந்த நாட்­டினை மாற்றக் கூடிய  மக்கள் சக்­தியை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். அனை­வ­ரையும்  ஒரு நிலைப்­பாட்­டுக்கு கொண்­டு­வரும் தலை­மையை உரு­வாக்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம்.

கேள்வி:- ஏனைய அனை­வரும் தாம் தேர்­த­லுக்கு தலைமை தாங்க தயார் என கூறு­கின்­றனர், நீங்கள் மட்டும் ஏன் தலை­மைத்­து­வத்தை ஏற்க முன்­வ­ர­வில்லை?

பதில்:- முதலில் இந்த தனி நபர் அர­சி­யலை கைவிட வேண்டும். இந்த நாட்­டினை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். மஹிந்த என்ற தனி நபர் இந்த நாட்டில் என்ன மாற்­றத்தை செய்தார்? மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற நபரால் மக்­க­ளுக்கு என்ன நலன்கள் கிடைத்­தது? ரணில் விக்­ர­ம­சிங்க என்ற தனி நபரை இந்த நாட்டு மக்­களால் ஏற்­று­கொள்ள முடி­யுமா? இந்த தனி நபர் அர­சியல் ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது.இவ்­வாறு தனி­நபர் கோட்டை கட்ட நினை­த்த­மையே இந்த நாடு அத­ல­பா­தா­ளத்தில் விழுந்­துள்­ளது.நாம் இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும்  சரி­யான தலை­மைகள் அனைத்­தையும் ஒன்­றி­ணைக்க முயற்­சி­க்கிறோம். அதன்­பின்னர் ஒரு­வரை நாமே தெரி­வு­செய்ய முடியும்.

கேள்வி:- அப்­போது நீங்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில்:- முதலில் சரி­யான அணி­யினை தெரி­வு­செய்து மக்கள் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்போம். சரியாக நாம் தெரிவுசெய்யும் அணியில் ஒரு தலைமைத்துவம் இருந்தால் அதனையே களமிறக்கவும்  முடியும். எம்மை பொறுத்தவரை நாட்டினையும் மக்களையும் மாற்றுப்பாதையில் சரியாக வழிநடத்தும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். அது சரியாக அமையுமானால் அதன் பின்னர் விலகியிருந்து வேடிக்கை பார்க்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாம் பொது அரசியல் கொள்கை கொண்டவர்கள். தனிப்பட்ட வரப்பிரசாதம் குறித்து நாம் சிந்திக்கவில்லை. இந்த கட்சியில் எவருக்கும்  பதவி மோகம்  இருந்ததில்லை. ஆனால் எந்த சவாலையும் சந்திக்கும் தலைமைத்துவம் எம் அனைவருக்கும் உள்ளது. எம்மிடம் நல்ல தலைமைகள் பல உள்ளன. அவற்றில் சரியான ஒன்றினை நாம் எடுப்போம். 

கேள்வி:- நீங்கள் இப்போதும் சிங்கள பெளத்த வாக்குகளை இலக்குவைத்தா அரசியல் செய்கின்றீர்கள்?

பதில்:- இல்லை, நாம் ஒருபோதும் இனவாத அரசியல் செய்யவில்லை. ஆனால் இன்று சகல சமூகத்திலும் இனவாத அரசியல் தான் வெளிப்படுகின்றது. இதனை அரசியல் வாதிகள் சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் நாம் அதனை செய்ய தயாராக இல்லை. சகல மக்களிடமும் செல்ல தயாராகவே உள்ளோம். தமிழ் மக்களிடம் நாம் கேட்பதும், முஸ்லிம் மக்களிடம் கேட்பதும் ஒன்றுதான். நீங்கள் தொடர்ந்தும் உங்களின் இனவாத தலைவர்களை நம்பி நாட்டினையும் உங்களையும் நாசமாக்க போகின்றீர்களா அல்லது பொது கொள்கையில் தேசிய ரீதியில் ஒன்றுபட்ட நாடாக மீளப்போகின்றோமா என்பதை இப்போதாவது தீர்மானியுங்கள். 

நேர்காணல்:- ஆர்.யசிஹரன்