அனுமன் வால்போல் நீளும் “பிரெக்சிற்” விலகல்

Published By: Daya

11 May, 2019 | 11:44 AM
image

ஐரோப்­பிய யூனி­ய­லி­ருந்து பிரித்­தா­னியா வில­கு­வது என்­கின்ற செய்தி முடி­வில்­லாமல் ஊட­கங்­களில் தொடர்­கி­றது என்­பது பலவித­மான கருத்­துக்கள், விமர்­ச­னங்கள், ஊகங்கள், செவ்­விகள் ஆகி­ய­வற்­றுக்கு கள­மாக அமை­கின்­றது.

பிரித்­தா­னியா என்­பது சூரியன் அஸ்­த­மிக்­காத சாம்­ராஜ்யம் என முன்னர் புகழ்­பெற்ற நாடு என்­பதும், பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம், சட்ட ஆட்சி, மனித உரிமை மேம்­பாடு, கைத்­தொழில் செழிப்பு, வந்­தோரை வர­வேற்கும் நாடு எனவும் பல பெரு­மை­களை தன்­ன­கத்தே கொண்­ட­நாடு. ஏன் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து வில­குதல் என்ற கொள்கை சார்ந்த விட­யத்தில் முடி­வில்­லாமல் இழு­ப­டு­கி­றது என்­கின்ற வினா அர­சியல் விட­யங்­களை பின்­பற்­று­வோர்க்கு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­பது யாரும் மறுக்க முடி­யாத விட­ய­மா­க­வுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் உள்­ளார்ந்த ஜன­நா­யகம், இரு சபை­களைக் கொண்ட பாரா­ளு­மன்றம், பிரித்­தா­னிய மக்­களின் விழிப்­பு­ணர்வு, தொடர்ச்­சி­யான ஜன­நா­யக பாரம்­ப­ரியம், பொதுக்­கொள்கை விட­யங்­களை அர­சியல் கட்சி என்­கின்ற குறு­கிய வட்­டத்­துக்குள் மட்­டுப்­ப­டுத்­தாமை, நாட்டு நலனை முன் வைத்தல் ஆகிய சீரிய கொள்­கை­களின் வெளிப்­பாடு தான் பிரெக்சித் எனக் கூறப்­படும் பிரித்­தா­னிய விலகல் இழு­ப­டு­வ­தற்­கான காரணம் என துணிந்து கூறலாம்.

ஒன்­று­பட்ட ஐரோப்பா என்­கின்ற சித்­தாந்தம் ஐரோப்­பிய நாடு­களின் 28 நாடுகள் ஒன்­றாக இணைந்து செயல்­ப­ட­வைத்த கார­ணி­யாகும். ‘ஒன்­று­பட்டால் உண்டு வாழ்வு’ என்­கின்ற உண்­மையை உண­ர­வைத்த வெற்­றி­க­ர­மான பல்­புடை அமைப்பு ஐரோப்­பிய ஒன்­றியம் அல்­லது ஐரோப்­பிய யூனியன் என்று சொல்­வது மிகை­யா­காது. பிரித்­தா­னிய மக்­களும் சரி, ஐரோப்­பாவின் மேற்கு நாடு­களும் சரி, மக்­களின் பொரு­ளா­தார செழுமை, வாழ்க்கைத் தரம் ஆகி­ய­வற்­றுக்கு முதன்மை கொடுக்கும் மனப்­பான்மை உள்­ள­வர்கள். பொரு­ளா­தா­ரத்­துக்கு வழங்­கப்­படும் முக்­கி­யத்­து­வமே அர­சியல் கொள்கை வகுத்­த­லுக்குக் கார­ண­மாக அமை­கின்­றது.

ஐரோப்­பியத் தலை­வர்­களின் அய­ராத முயற்­சி­யி­னா­லேயே ஐரோப்­பிய ஒன்­றியம் உரு­வா­கி­யது எனக் கூறி­னாலும் ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­னைய ஐரோப்­பிய சமு­தாயம் என்ற அமைப்பில் தொடர்ச்­சியே என்­பது தான் யதார்த்­த­மாகும். ஒன்­று­பட்ட ஐரோப்­பாவில் அர­சியல் பொரு­ளா­தார சமூக ஒன்­றி­ணைப்பை ஒரு­கா­லத்தில் வரித்து நின்ற பிரித்­தா­னி­யாவின் கொள்கை வகுப்­பா­ளர்கள் பிரிட்டன் ஐரோப்­பிய யூனி­யனில் தொடர வேண்­டுமா என வேறு­பா­டாக சிந்­திக்கத் தொடங்­கினர். அதன் விளை­வா­கவே 13.06.2016 இல் பிரிட்­டனில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிகழ்த்­தப்­பட்­டது. பிரித்­தா­னிய வாக்­கா­ளர்­களில் 51.9 வீதத்­தினர் வில­குதல் என்ற தெரி­வுக்கு வாக்­க­ளித்து வில­குதல் நட­வ­டிக்­கையில் முத­லா­வது அடியை எடுத்­து­வைத்­தனர். ஐரோப்­பிய யூனி­யனின் ஒப்­பந்தம் என்­கின்ற சட்­டத்தில் 50 ஆவது பிரிவு எவ்­வாறு அங்­கத்­துவ நாடு விலக வேண்­டு­மென எடுத்­து­ரைக்­கி­றது.

அந்த விதியின் பிர­கா­ரமே பிரித்­தா­னி­யாவில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிகழ்த்­தப்­பட்­டது. 29 பங்­குனி 2017 இல் பிரிட்டன் அர­சாங்கம் பிரிவு 50 இன் பிர­காரம் வில­கு­வ­தற்­கான ஒப்­பு­தலை வழங்­கி­யது. பிரிவு 50 இன் பிர­காரம் பிரித்­தா­னிய விலகல் பிரித்­தா­னிய அர­சாங்கம் தீர்­மா­னித்த திக­தி­யி­லி­ருந்து இரண்டு வரு­டங்­களில் பூர்த்­தி­செய்­யப்­பட வேண்டும். எனவே பிரித்­தா­னிய வில­க­லுக்­கான வெட்­டுத்­தினம் அல்­லது இறு­தித்­தினம் 29 பங்­குனி 2019 என்­பது விதிப்­பி­ர­கா­ர­மா­னது. பிரித்­தா­னிய பிர­தமர் பிரித்­தா­னியா வில­கு­வது எவ்­வாறு என்ற யோச­னையை பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து இன்­று­வரை அங்­கீ­காரம் பெறத் தவ­றி­ய­தா­லேயே பிரிட்டன் விலகும் விவ­காரம் தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது. ஐரோப்­பிய யூனியன் பிரித்­தா­னி­யாவின் கால­நீ­டிப்­புக்­கான கோரிக்­கையை ஏற்று வில­கு­வ­தற்­கான இறுதித் திக­தி­யாக 31 ஐப்­பசி 2019 இனை குறித்­தொ­துக்­கி­யுள்­ளது.

பிரித்­தா­னிய வில­கலை உறு­தி­யாகச் செயற்­ப­டுத்­து­வதில் பிர­தமர் தெரெசா மே பல தோல்­வி­களைச் சந்­தித்­துள்ளார்.

இந்தப் பின்­ன­ணியில் ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்தல் 23 வைகாசி 2019 இல் நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய இராச்­சிய­மான பெரிய பிரித்­தா­னியா தேர்தல் இத்­தி­க­தியில் நடை­பெ­ற­வுள்­ளது. முன்னர் பிரித்­தா­னி­யாவின் விலகல் பங்­குனி 

29க்கு முன்னர் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டதால் பிரித்­தா­னி­யாவின் ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்தல் திட்­ட­மி­டப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் ஐரோப்­பிய யூனி­யனும் பிரித்­தா­னி­யாவும் வில­க­லுக்­கான கால நீடிப்பு திக­தி­யாக 31 ஐப்­பசி 2019 ஆம் திகதி எல்­லையை ஏற்­றுக்­கொண்­டதால் பிரித்­தா­னி­யாவில் 23 ஆம் திகதி தேர்தல் நடை­பெற வேண்டும்  என்­பது ஐரோப்­பிய யூனியன் விதி­யாகும். பிரித்­தா­னிய பிர­தமர் 23 வைகா­சிக்கு முன்னர் பிரித்­தா­னிய வில­கலை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றினால், பிரித்­தா­னி­யாவில் ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­று­வதை தவிர்க்க முடியும். அவ்­வாறு நிக­ழா­விடின் பிரித்­தா­னி­யாவில் தேர்தல் நடை­பெற்று ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்­திற்கு பிரித்­தா­னிய ஐரோப்­பிய யூனியன் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் தெரி­வாவர். எனினும் குறிப்­பிட்ட காலக்­கெ­டு­விக்குள் பிரித்­தா­னி­யாவின் விலகல் நிகழ்ந்தால் பிரித்­தா­னிய பிர­தி­நி­திகள் அங்­கத்­துவம் முடி­வ­டையும்.

இம்­முறை நடை­பெறும், ஐரோப்­பிய யூனியன் தேர்­தலில் பிர­தான பேசு­ம் பொ­ரு­ளாக பிரெக்சிற் இடம்­பெறும் என அர­சி­ய­ல் அ­றி­ஞர்கள் கூறு­கின்­றனர். 751 பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களைக் கொண்ட ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அந்­தந்த நாடு­களின் கட்­சிகள் ரீதி­யாக போட்­டிகள் இடம்­பெ­று­வ­தில்லை. ஐரோப்­பிய யூனியன் பிர­தே­சத்­திற்குள் இயங்கும் பொது­வான கட்­சி­களின் கீழ் போட்­டிகள்  இடம்­பெறும். ஐரோப்­பிய மக்கள் கட்சி, ஐரோப்­பிய சோஷலிஸ்ட்­டு­களின் கட்சி, ஐரோப்­பிய பழை­மைபேண் கட்சி, ஐரோப்­பிய பசுமைக் கட்சி, ஐரோப்­பிய சுதந்­திரக் கூட்­டணி ஆகி­யவை சில கட்­சி­க­ளாகும். தற்­போ­தைய ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தில் பிரித்­தா­னி­யா­வுக்கு ஒதுக்­கப்­பட்ட ஆச­னங்கள் 73. பிரிட்டன் விலகிய  பின் அந்த 73 ஆச­னங்­க­ளையும் ஏனைய நாடுகள் மத்­தியில் எவ்­வாறு பகிர்­வது என பின்னர் தீர்­மா­னிக்­கப்­படும். ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுற்­றாடல் பாது­காப்பு பிர­தான இடத்தை வகிக்­க­வி­ருக்­கின்­றது. 

அதா­வது புவி வெப்­ப­ம­டைதல், கால­நிலை மாற்­றங்­களை உள்­ள­டக்­கிய விவ­கா­ரமே சுற்­றாடல் பாது­காப்பு. இதற்கு அடுத்­த­தாக குடி­வ­ரவு, வேலை­வாய்ப்பு போன்ற விவ­கா­ரங்கள் முன்­னிலை பெறும். அண்­மைய வரு­டங்­களில் ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்தும் வேறு சில நாடு­க­ளி­லி­ருந்தும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு படை­யெ­டுத்­து­வரும் சட்­ட­வி­ரோத குடி­யே­றி­க­ளினால் உள்ளூர் மக்­களின்  பொரு­ளா­தாரச் சுமைகள் அதி­க­ரித்­து­விட்டதென்றும், வேலை­வாய்ப்­புக்­கான சந்­தர்ப்­பங்­களும் குறைந்து வரு­வ­தா­கவும் ஐரோப்­பிய மக்கள் சிந்­திக்க ஆரம்­பித்­து­விட்­டனர். இதன் கார­ண­மா­கவே ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுற்­றாடல் பாது­காப்பு, குடி­வ­ரவு, வேலை­வாய்ப்பு ஆகிய விட­யங்கள் முன்­னு­ரிமை பெறு­கின்­றது. 

ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்தல் நெருங்­கி­வரும் சூழலில் பிர­தமர் தெரெசா மே விலகல் தொடர்­பான முயற்­சியை இன்னும் கைவி­ட­வில்லை. பல முயற்­சி­களும் தோல்வி அடைந்த நிலையில் பிரித்­தா­னிய எதிர்க்­கட்சித் தலைவர் ஜெரமி கோபி­னுடன் இணக்­கப்­பாடு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்றார். எதிர்க்­கட்சித் தலை­வ­ருடன் இணக்­கப்­பா­டொன்றை அடையும் கட்­டத்தை தாம் நெருங்­கி­விட்­ட­தாக பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அர­சியல் வேறு­பா­டு­களைப் புறந்­தள்ளி இரு­வரும் பிரெக்சிற் திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் பெற உழைக்­க­வேண்டும் என கேட்­டுள்ளார்.

வைகாசி மாதத்தில் ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெறும் நாள் நெருங்­கி­வ­ரு­வதால், அதற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்றில் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் சங்­க­ட­முண்டு. பிர­த­மரின் சம­ரச திட்­டத்தில் ஐரோப்­பிய யூனி­ய­னுடன் வில­க­லுக்குப் பின்­னரும் சுங்க ஏற்­பா­டுகள் தொடர வேண்டும் என்ற திருத்­தத்தை உள்­ள­டக்க தயா­ரா­க­வுள்ளார். ஆனால் சுங்க யூனியன் ஏற்­பாடு பிர­த­மரின் சொந்தக் கட்­சி­யான பழை­மைபேண் கட்­சியில் அதி­ருப்­தி­யினை ஏற்­ப­டுத்தும் சாத்­தியம் தெரி­கி­றது. அது­மட்­டு­மல்ல பழை­மைபேண் கட்­சியில் தெரெசா மேயின் தலை­மைத்­து­வத்­திற்கு சவால் ஏற்­படும் நிலையும் தெரி­கி­றது. 2019 ஆம் ஆண்டு வைகாசி 2 ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களும் பிரெக்சிற் விவ­கா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வுகள் பழை­மைபேண் கட்­சிக்கும் தொழிற்­கட்­சிக்கும் எதிர் ­வ­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. 

“தெரெசா மேயின் பழை­மைபேண் கட்சி மீது வாக்­கா­ளர்­களின் எதிர்ப்பு காட்­டப்­பட்­டுள்­ளது. 

பிரெக்சிற் விவ­கா­ரத்தில் தீர்க்­க­மான தீர்­மா­ன­மொன்றைப்  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­ற­வில்லை என்ற சீற்­றத்தை வாக்­கா­ளர்கள் வெளிக்­காட்­டி­யுள்­ளனர்.  அதே­போன்று 9 வரு­டங்­க­ளாக எதிர்க்­கட்­சி­யா­க­வி­ருக்கும் தொழிற்­கட்சி ஆட்­சியில் அமர்­வ­தற்­கான அறி­கு­றிகள் தெரி­ய­வில்லை என்­கின்­றனர் அர­சியல் ஆய்­வா­ளர்கள், பிரெக்சிற் விவ­கா­ரத்தில் தொழிற்­கட்சித் தலைவர் ஜெரொமி கொபின் நாட்டை முதன்­மைப்­ப­டுத்தி கையா­ள­வில்லை என்­கின்ற அதி­ருப்­தியை வாக்­கா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர் என உள்­ளூ­ராட்சி முடி­வு­களை ஆய்வு செய்யும் வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி பிர­தமர் தெரெசா மே எதிர்க்­கட்சித் தலை­வரை ஒத்­து­ழைக்கும் வண்ணம் மீண்டும் கேட்­டி­ருக்­கிறார்.

பிரெக்சிற் தாமதம் பொரு­ளா­தார ரீதி­யாக பிரிட்­ட­னுக்கு எவ்­வி­த­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தப்­போ­கி­றது என்­பது நோக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். நில­புலன் துறை, வாகன உற்­பத்தி, குறைந்­து­வரும் முத­லீடு, பெரும் கம்­பனி அதி­பர்­க­ளிடம் காணப்­படும் உற்­சா­க­மின்மை, பிரித்­தா­னிய பொரு­ளா­தா­ரத்­திற்குத் தற்­கா­லிகப் பின்­ன­டை­வு­களை உரு­வாக்கும். அர­சி­ய­லுக்கும் பொரு­ளா­தா­ரத்­திற்கும் எவ்­வ­ளவு தொடர்பு இருக்­கி­றது என்­பதை பிரெக்சிற் இழு­பறி விவ­காரம் தெளி­வாகக் காட்­டு­கி­றது. பங்­குனி 29 இற்கு முன்னர் வில­க­ வேண்டும் என்­கின்ற நிபந்­த­னையை பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றம் நிறை­வேற்ற முடி­ய­வில்லை என்­பதும் அதே பாரா­ளு­மன்றம் பிரே­ர­ணைகள் மூலம் ஐரோப்­பிய யூனி­ய­னிடம் கால நீடிப்­புக்­கோ­ரி­ய­மையும் ஐரோப்­பிய  யூனியன் ஐப்­பசி31 வரை தற்­போது  கால­நீ­டிப்பு வழங்­கி­ய­மையும் முற்றுமுழு­தான அர­சியல் தீர்­மா­னங்­க­ளாகும். 

இந்த வகை­யான அர­சியல் தீர்­மா­னங்கள் எவ்­வாறு பொரு­ளா­தாரத் துறையில் செல்­வாக்கு செலுத்­து­கின்­ற­தென்­பது தற்­போது நேர­டி­யாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. ஏனெனில் அரசு – அர­சாங்கம் என்ற இரு பதங்­களும் மானி­ட­வாழ்­வினை பிர­தா­ன­மாக நிர்­ண­யிக்கும் கார­ணிகள் என்­பது மீண்டும் நிரூ­பிக்­கப்­ப­டு­கி­றது. நிலை­யான அர­சாங்கம் – நிலை­யான தீர்­மா­னங்கள் – சுற்­றா­ட­லுக்கு சிநே­கி­த­மான பொரு­ளா­தாரக் கொள்­கைகள், அச்­சு­றுத்­த­லாக உரு­வாகி வரும் பயங்­க­ர­வா­தத்துக்கு முகம் கொடுப்­ப­தற்­கான கொள்­கைகள், அபி­வி­ருத்தியடைந்த நாடுகள் அபி­வி­ருத்­தி­ய­டையும் நாடுகள் தொடர்­பாக கடைப்­பி­டிக்கும் வர்த்­தக கொள்­கைகள் யாவும் அர­சியல் தீர்­மா­னங்­களால் நெறிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அர­சியற் கொள்கை எவ்­வாறு மக்­களின் குடி­வ­ரவு, குடி­ய­கல்வில் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றது என்­ப­தற்கும் பிரெக்சிற் உதா­ர­ண­மாகும். 

ஐரோப்­பிய யூனியன் அமைப்பு ஏற்­பா­டு­க­ளுக்­க­மைய ஒரு நாட்டின் பிர­ஜைகள் இன்­னொரு நாட்­டுக்குச் செல்­லவோ, வேலை செய்­யவோ, முத­லீடு செய்­யவோ ஒரு தடையும் கிடை­யாது. பிரெக்சிற் நிகழ்ந்தால், பிரிட்­ட­னுக்கு வெளியே வாழும்  அந்நாட்டுப் பிரஜைகளும், அங்கு வாழும் ஏனைய நாடுகளின் பிரஜைகளும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிவது அவசியமாகும். பிரித்தானியாவில் வாழும் 3.8 மில்லியன் EU பிரஜைகள் 29.03.2019 க்கு முன்னர் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தால் தொடர்ந்து வாழமுடியும். தொழில் செய்யமுடியும் என்ற ஏற்பாடு உண்டு. அதேபோன்று பிரித்தானியாவின் 1.3 மில்லியன் பிரஜைகள் EU நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் தொழில் செய்யும் உரிமை உட்பட சகல உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிக்க முடியும். பிரெக்சிற்றுக்குப் பின்னரும் இந்த நிலை தொடரும். 31.12.2020 வரை இந்நிலை தொடரும். பிரெக்சிற் விலகல் பலதுறைகளிலும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

எது எவ்வாறாயினும் பிரெக்சிற் விவகாரம் பிரித்தானியாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம். பிரதான கட்சிகளான பழைமைபேண் கட்சி தொழிற்கட்சி ஆகியவை 2016 சர்வஜன வாக்கெடுப்பில் ஐக்கிய இராச்சிய மக்களின் ஆணையை, விலகுதலை முறைப்படி நிறைவேற்றவில்லை என்பது 2 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி முடிவுகளில் மக்களின் தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டது. பிரதமர் தெரெசா மே விரைவில் பிறெக்சிற் விலகலை நடத்தினாலும் சரி, ஐப்பசி 30 க்கு முன்னர் நடத்தினாலும் சரி, பழைமைபேண் கட்சியின் தலைவராகத் தொடர்வதில் பெரும் சவால்கள் உண்டு என்பது மட்டும் நிஜமானது.

(ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54