பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித், தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.ஜ சூர்யா நடிப்பில் உருவான ‘மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் இம்மாதம் 17 ஆம் திகதி அன்று வெளியாகிறது என்பதும், அவர் கதையின் நாயகனாக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் முடிவடைந்து இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பதும், தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து, ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.