லண்டனில் உள்ள 7 கிங்ஸ் மசூதியில், ரமழான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.

மேற்படி மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டவோறே உள்ளே நுழைய முயன்றுள்ளான்.

சத்தம் கேட்டு தொழுகையில் இருந்தவர்கள் அவனை விரட்டி பிடிக்க முயற்சிக்கவே அவன் தப்பியோடியுள்ளான். 

தகவல் அறிந்து வந்த பொலிஸார், மர்ம நபர் குறித்து விசாரித்து வருவதோடு மசூதியை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.