(எம்.மனோசித்ரா)

சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கும் துருக்கி அரசாங்கம் தயாராகவுள்ளதாக துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் செடாட் ஒனால் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து கலந்துரையாடியிருந்தார். 

இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது, சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு துருக்கி அரசாங்கம் தயாராகவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி செசெப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் பிரதமர் ரணிலிடம் தெரிவித்தார்.