உழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள்  வீரர்கள் இருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின்  வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோரே ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக  சர்வதேச கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.

10 ஓவர் லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கெட்  சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியமைக்காக  அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்றய தினத்தில் இருந்து  14 நாட்களுக்கு  நுவன்  சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்த்தன ஆகியோரின்  குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகள்  மேற்கொள்ளப்படுமென   ஐ.சி.சி மேலும் தெரிவித்துள்ளது.