பாகிஸ்தானில் நஞ்சு கலந்த தின்பண்டங்களால் 23 பேர் பலி

Published By: Raam

26 Apr, 2016 | 08:38 AM
image

மத்­திய பாகிஸ்­தானில் நச்சுத் தன்­மை­யான இனிப்பு தின்­பண்­டங்­களை உண்ட 23 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தனர்.

பஞ்சாப் மாகா­ணத்­தி­லுள்ள கரோர் லால் இஸான் பிராந்­தி­யத்­தி­லுள்ள குறிப்­பிட்ட வீட்டில் பேரப்­பிள்­ளை­யொன்று பிறந்­ததை கொண்­டாடும் முக­மாக நண்­பர்­க­ளுக்கும் உற­வி­னர்­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கப்­பட்ட தின்­பண்­டங்கள் கார­ண­மா­கவே இந்த உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன.

அந்த தின்­பண்­டங்­களில் பூச்­சி­நா­சினி கலந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

அந்த தின்­பண்­டங்­களை உண்ட மேலும் 52 பேர் சுக­வீ­ன­முற்று மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் புதி­தாக பிறந்த குழந்­தையினது தந்­தையும் அதன் மாம­னார்களான 7 பேரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து அந்த தின்­பண்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்ட வெதுப் ­ப­கத்தின் உரி­மை­யா­ளரும் பணி­யா­ள­ரு­மான இரு சகோ­தரர்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அந்த வெதுப்­ப­கத்­திற்கு அரு­கி­லி­ருந்த கிரு­மி­நா­சினி கடை­யொன்றில் புதுப்­பித்தல் வேலைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­ததால், அதன் உரி­மை­யாளர் தன்­னி­ட­மி­ருந்த கிரு­மி­நா­சினி கையி­ருப்பை பாது­காப்­பாக வைக்­க ­கு­றிப்­பிட்ட வெதுப்­ப­கத்தை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந் ­நி­லையில் அந்த கிரு­மி­நா­சினி பக்­கெட்­டு­களில் சிறிய பக்கெட் ஒன்று மேற்படி தின்பண்டங்களில் கலக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகி றது. இந்த சம்பவம் தொடர்பில் பிராந் திய பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

புரூண்­டியில் பாட­சாலை மாணவர் ­களை ஏற்றிச் சென்ற டிரக் வண்­டி­ யொன்று விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந் ­தது 30 பாட­சாலை மாணவர்­களும் அவர்­க­ளது மேற்­பார்­வை­யா­ளர்களும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரி கள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தனர்.

ருதனா மாகா­ண­த்தி­லுள்ள கிகுகு பாட­சா­லை­யி­லி­ருந்து சுமார் 130 மாண­வர்­களை ஏற்றிச் சென்ற அந்த பஸ்ஸில் அந்த சிறு­வர்­க­ளுக்கு பாது­கா­வ­லாக அருட் தந்­தை­யொ­ரு­வரும் கன்­னி­யாஸ்­தி­ரி­யொ­ரு­வரும் போதகர் ஒரு­வரும் சென்­றுள்­ளனர். காயமடைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08