இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு சர்வதேச சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் நீண்டகால, குறுகிய காலத் திட்டங்களை வகுத்து வருவதாகவும் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய கால பிரசார இயக்கத்திற்கு 46 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்படும் என அவர் குறிப்பிட்டார். 

அத்தோடு, தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே சுற்றுலா மேம்பாட்டு பணியகத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.