(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட அறிக்கையாளர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

 சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி விஜயம் செய்கின்றனர். 

மே மாதம்  ஏழாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை  செய்யவுள்ளனர்.