பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். வருவாய் ஈட்டும் தருணத்தில் தங்களது உடலில் மாதவுடாய் தொடர்பான கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டால், தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர அக்கறை காட்டாமல், அதனை தவிர்ப்பதற்காக அல்லது அதனை சீராக்குவதற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். 

இது அவர்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் உறுதியாகி இருக்கிறது.

மாதவிடாய் பிரச்சினைக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹோர்மோன் மாத்திரைகளை அவர்கள் தொடர்ச்சியாக எடுப்பதால் பக்கவிளைவிற்கு ஆளாகிறார்கள். சில பெண்கள் இதன் காரணத்தினாலேயே மார்பகப் புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே மாதவிடாய் குளறுபடிகளை சீராக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைக்கும் காலங்களில் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

அதையும் கடந்து மாதவிடாய் சுழற்சி கோளாறுகளுக்காக ஹோர்மோன் மாத்திரைகளை சாப்பிடும் பெண்கள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்கள். அதையும் கடந்து சில சௌகரியங்களுக்காக அத்தகைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மார்பக புற்று நோய் மட்டுமல்ல சினைப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் புற்று நோய் மருத்துவ நிபுணர்கள். 

எனவே மாதவிடாய் சுழற்சியை உடலியக்கத்திற்கு ஏதிராக தள்ளிப்போடவோ அல்லது நீங்கள் விரும்பும் நேரத்திற்கு வரவழைக்கவோ முயற்சிக்கவேண்டாம் என்று  மருத்துவ துறையினர் கேட்டுக் கொள்கிறார்கள்.

டொக்டர் ராஜன்.

தொகுப்பு அனுஷா.