(இராஜதுரை ஹஷான்)

தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லிம் மக்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உயிர்த்தெழு ஞாயிறு நாளில் அடிப்படைவாதிகளினால்  நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலினால் நாடு  பாரிய அவல  நிலையினை எதிர்க்கொண்டுள்ளது. மத தலைவர்களின்  முறையான   வழிநடத்திலினால் இனங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பாரிய  முரண்பாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

தற்போது காணப்படும் அமைதி நிலையினை அனைவரும் பேணி  முழுமையாக தீவிரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதுடன் இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான போதனையினையும், அறகருத்துக்களையும் அனைத்து இன மக்களுக்கும் பகிரங்கப்படுத்த  தயார் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.