87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய குறித்த நபர் கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான ஞசு 656 விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

குறித்த நபர் பாகிஸ்தான் லாகூரில் இருந்து டோகா சென்று அங்கிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தன்னுடைய பயணப்பையில் 4 பக்கற்றுகளில் ஹெரோயினை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.