மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முதலாக ‘சங்கத் தமிழன் ’என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் வெவ்வேறு வேடங்களில் தோன்றி ரசிகர்களை ஆச்சரிய படுத்துவதில் முதலிடத்தில் இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரஞ்சு மிட்டாய், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என பல படங்களை உதாரணமாகக் கூறலாம். 

இந்நிலையில் வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சங்கத் தமிழன்’ என்ற படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். 

இரண்டு கதை நாயகர்களை கொண்டிருக்கும் இந்த படத்தில், ஒரு வேடத்திற்கு ராசி கண்ணா ஜோடியாகவும், மற்றொரு வேடத்திற்கு நிவேதா பெத்துராஜ் ஜோடியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து மே 17 ஆம் திகதியன்று வெளியாக வேண்டிய ‘சிந்துபாத்’ என்ற திரைப்படம் போதிய படமாளிகை கிடைக்காத காரணத்தினால் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.