அமெ­ரிக்­கா­விலும், இந்­தி­யா­விலும் ஏற்­க­னவே அதி­க­ரித்து வரு­கின்ற இஸ்­லா­மி­யரைப் பற்­றிய பீதி (இஸ்­லா­மிய அச்­சக்­கோ­ளாறு) இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு வேரூன்ற அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இலங்­கைக்­கான முன்னாள் அமெ­ரிக்கத் தூது­வரும் ஒபாமா நிர்­வா­கத்தில் தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்­நோக்­கு­வதைப் போன்ற நெருக்­க­டி­க­ளுக்­கான எந்­த­வொரு நாட்­டி­னதும் பிர­தி­ப­லிப்பு தனிப்­பட்ட நலன்­க­ளையும் குறு­கிய கட்சி நலன்­க­ளையும் பாது­காப்­பதில் அக்­கறை கொண்டு செயற்­ப­டக்­கூ­டிய அர­சி­யல்­வா­திகள் மீது தங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொர­கொட தலை­மை­யி­லான "பார்த் பைன்டர்" அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்­வொன்றில் "சீனா மற்றும் தெற்­கா­சியா நோக்­கிய அமெ­ரிக்க வெளியு­றவுக் கொள்­கையும் இலங்கை மீதான அதன் தாக்­கமும்" என்ற பொருளில் உரை நிகழ்த்­திய ரொபேட் பிளேக், உள்­நாட்டுப் போரின் முடி­விற்குப் பின்­ன­ரான பத்து வரு­டங்­களில் இலங்கை கண்­டி­ருக்­கக்­கூ­டிய முன்­னேற்­றங்­களை நிலை­பே­றா­ன­தாக்­கு­வ­தற்கும், புதி­தாகத் தோன்­றி­யி­ருக்கும் குண்­டுத்­தாக்­குதல் பயங்­க­ர­வாத சம்­ப­வங்­களின் விளை­வான அச்­சு­றுத்­தலை எவ்­வாறு வெற்­றி­க­ர­மாகச் சமா­ளிப்­பது என்­பது பற்­றியும் விரி­வாகக் கூறி­யி­ருக்­கிறார்.

அமெ­ரிக்­காவின் "மக்­லாட்டி அசோ­ஸியே ட்ஸ்" என்ற நிறு­வ­னத்தில் இந்­தியா மற்றும் தெற்­கா­சிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பணிப்­பா­ள­ராகத் தற்­போது பணி­யாற்றும் ரொபேட் பிளேக் தனது உரையில் இலங்­கையின் தற்­போ­தைய நெருக்­கடி குறித்து கூறி­யி­ருக்கும் முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு:

நான் இலங்­கைக்கு மகிழ்ச்சி மிக்­கதும், விசனம் நிறைந்­த­து­மான கலப்­பான உணர்­வு­ட­னேயே வந்­தி­ருக்­கிறேன். இலங்­கை­யி­லி­ருந்து நான் அமெ­ரிக்­காவுக்குச் சென்ற பிறகு பத்து வரு­ட­கா­லத்தில் இங்கு ஏற்­பட் ­டி­ருக்கும் பல நேர்­ம­றை­யான மாற்­றங்­களைக் காண்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின் றேன். ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற பயங்­க­ர­மான குண்­டுத்­தாக்­கு­தல்கள் நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­களைப் பலி கொண்­டி­ருப்­பது குறித்தும், இந்தப் பயங்­கரம் இலங்­கையில் புதிய பிள­வு­களைத் திறக்கும் அச்­சு­றுத்­தலைத் தோற்­று­வித்­தி­ருப்­பது குறித்தும் நானும் அமெ­ரிக்­கா­வி­லுள்ள இலங்­கையின் பல நண்­பர்­களும் மிகுந்த வேத­னை­ய­டைந்­தி­ருக்­கிறோம்.

அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள் ஆலோ ­சனை வழங்­கு­வ­தற்கு ஒரு­பொ­ழுதும் வெட்­கப்­ப­டு­வ­தில்லை. விரும்­பப்­ப­டாத வேளையில் கூட அந்த ஆலோ­ச­னை­களைக் கூற அவர்கள் தயங்­கு­வ­தில்லை என்று எனது பழைய ஆசானும், இந்தத் தலை­மு­றையில் மிகவும் மதிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரி­யு­மான முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செய­லாளர் பில் பேன்ஸ் பகி­டி­யாகக் கூறு­வதை இச்­சந்­தர்ப்­பத்தில் நினை­வு­ கூ­ரு­கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் அவற்றில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளி­னதும், காய­ம­டைந்­த­வர்­க­ளி­னதும் குடும்­பங்­களின் தனிப்­பட்ட அனர்த்­தங்கள் என்­றில்லை. அந்தத் தாக்­கு­தல்கள் 26 வரு­ட­கால உள்­நாட்டுப் போரி­லி­ருந்து மீண்­டு­வந்து கொண்­டி­ருக்­கின்ற இலங்­கையில் பழைய புண்­களைத் திறந்து விட்­டி­ருக்­கின்­றன. அந்தத் தாக்­கு­தல்கள் இலங்­கையில் தொழில்­துறை முயற்­சி­களில், வர்த்­தக முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது எந்­த­ள­விற்கு விவே­க­மா­னது என்­பது பற்­றிய கேள்­வியை வர்த்­தகப் பங்­கா­ளிகள் மனதில் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து படிக்க வேண்­டிய பாடம்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் யார், வெளிநா­டு­க ளில் இருக்­கக்­கூ­டிய பயங்­க­ர­வாத குழுக்­க­ளுடன் அவர்கள் கொண்­டி­ருந்­தி­ருக்­கக்­கூ­டிய தொடர்­புகள் எவை, இலங்­கையில் புல­னாய்வுத் துறை­யி­னாலும் பாது­காப்புப் படை­க­ளி­னாலும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத முறையில் மிகவும் நவீன யுக்­தி­க­ளுடன் நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தல்­களைப் பல்­வேறு நக­ரங்­களில் எவ்­வாறு அவர்­களால் நடத்த இய­லு­மாக இருந்­தது. பயங்­க­ர­வா­தி­களின் கட்­ட­மைப்­புக்­களில் எஞ்­சி­யி­ருக்­கக்­கூ­டி­யவை எவை என்­பவை பற்­றிய விசா­ர­ணைகள் சுறு­சு­றுப் ­பாக உறு­திப்­பாட்­டுடன் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

2001 செப்­டெம்பர் 11 அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரிலும், வாஷிங்டன் நக­ரிலும் பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட படு­மோ­ச­மான தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­ன­ரான சூழ்­நி­லை­களில் அமெ­ரிக்கா இழைத்த தவ­று­க­ளி­லி­ருந்து இலங்­கையால் படிப்­பி­னை­களைக் கற்­றுக்­கொள்ள முடியும். அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான உகந்த தடுப்­புக்கள் எது­வு­மில்­லாமல் அமெ­ரிக்க அர­சாங்கம் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதன் மூலம் அதீ­த­மான முறையில் அதன் பிர­தி­ப­லிப்பை வெளிக்­காட்­டி­யது என்றே நிபு­ணர்கள் விளம்­பு­கி­றார்கள். கியூ­பாவின் குவாண்­ட­னா­மோவில் தடுப்­புக்­காவல் நிலை­யங்­களை ஏற்­ப­டுத்தி அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் சட்­ட­பூர்­வ­மான உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்த நிலை­வரம் நெருக்­க­டி­யான தரு­ணங்­களில் அர­சாங்­கத்­திற்கு இருக்­கக்­கூ­டிய அதி­கார எல்­லை­களைப் பற்றிப் பெரு­ம­ளவு கேள்­வி­களை எழுப்­பி­யது. எமது ஆட்சி முறை­யி­லி­ருக்­கக்­கூ­டிய உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரான தடுப்­புக்­க ளும் சமப்­ப­டுத்­தல்­களும் பின்னர் தவ­று­களை நாம் திருத்­திக்­கொள்ள வழி­வ­குத்­தன. அத்­து­மீ­றல்­க­ளையும் தவ­றான நட­வ­டிக்­கை­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்­து­வதில் பத்­தி­ரி­ கைகள் பல­மான பாத்­தி­ர­மொன்றைக் கொண்­டி­ருந்­தன.

9/11 இற்குப் பின்­ன­ரான அனு­ப­வங்­க ளின் அடிப்­ப­டையில் இலங்கை அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து இன்­னொரு பாடத்­தையும் கற்­றுக்­கொள்ள முடியும். சி.ஐ.ஏ., எப்.பி.ஐ. மற்றும் புல­னாய்வு அமைப்­புக்­க­ளுக்­கி­டையே தக­வல்­களைப் பகிர்ந்­து­கொள்­வதில் குறை­பாடு மிக்க தொடர்­பாடல் இருந்­தது. புல­னாய்வு நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­பு­க­ளையும், ஒத்­து­ழைப்­பையும் மேம்­ப­டுத்­து­வ­தற்கு அன்­றைய புஷ் நிர்­வாகம் சகல புல­னாய்வு மற்றும் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்­க­ளையும் சேர்ந்த சிரேஷ்ட நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய செயற்­பாட்டுக் குழு­வொன்றை அமைத்­தது. இந்­தக்­குழு விசேட அச்­சு­றுத்­தல்கள் பற்றி ஆராய்­வ­தற்குக் கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய சகல தக­வல்­க­ளையும் மதிப்­பீடு செய்­வ­தற்கு கிர­ம­மாகக் கூட்­டங்­களை நடத்­தி­யது.

இஸ்­லா­மிய அரசு இயக்­கமோ அல்­லது ஏனைய இஸ்­லா­மிய தீவி­ர­வாதக் குழுக்­களோ வேரூன்­றாத வகையில் மிகவும் கவ­ன­மாக இலங்கை செயற்­பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் இஸ்­லா­மிய அர­சிற்கு இருந்­தி­ருக்­கக்­கூ­டிய துல்­லி­ய­மான பாத்­திரம் குறித்து இன்­னமும் விசா­ரிக்­கப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது என்ற போதிலும், இன்­றைய சந்­தர்ப்­பத்தில் இல ங்கை ஏன் ஒரு இலக்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டது என்ற கேள்வி எழவே செய்­கி­றது. முத­லா­வ­தாக இஸ்­லா­மிய சமூ­கத்­திற் கும், கிறிஸ்­தவ சமூ­கத்­திற்கும் இடை­யி­லான உற­வுகள் இலங்­கையில் வர­லாற்று ரீதி­யாக நல­மா­கவே இருந்து வந்­தி­ருப்­ப­தாலும், தீவிர இஸ்­லா­மிய சிந்­தனை இலங்­கையில் ஒரு­போதும் பெரும் ஆத­ரவைப் பெற­வில்லை என்­ப­தாலும் நாங்கள் தீட்­டக்­கூ­டிய தாக்­குதல் திட்­டங்கள் தேவை­யற்ற கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாது என்று உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­கா­ரர்கள் கணிப்­பிட்­டி­ருக்­கக்­கூடும்.

இரண்­டா­வ­தாக 2009 மேயில் முடிவுக்கு வந்த உள்­நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கைப் பாது­காப்புப் படைகள் தங்­க­ளது கடு­மை­யான பாது­காப்புக் கண்­கா­ணிப்­புக்­களைத் தளர்த்தி இருப்­ப­தா­கவும், விடு­தலைப் புலிகள் மீண்­டெ­ழு­வதைத் தவிர்ப்­ப­தி­லேயே பாது­காப்புப் படைகள் தமது கவ­னத்தைச் செலுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றும் தாக்­கு­தல்­தா­ரிகள் கணிப்­பிட்­டி­ருக்­கக்­கூ­டிய சாத்­தி­யமும் இருக்­கி­றது.

அதே­வேளை இத்­த­கைய குண்­டுத்­தாக்­கு­தலை நடத்தி முஸ்லிம், கிறிஸ்­தவ மற்றும் ஏனைய சமூ­கங்­க­ளுக்­கி­டையே பகை­மையை விதைத்தால் அதைத் தங்­க­ளது கெடு­தி­யான நோக்­கங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் என்றும் தாக்­கு­தல்­தா­ரர்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கக்­கூடும். இலங்கை இதை ஒரு­போதும் அனு­ம­திக்­கக்­கூ­டாது. இச்­சந்­தர்ப்­பத்தில் நான் இலங்­கைக்கு முன்­வைக்­கக்­கூ­டிய சிபா­ரிசு நல்­லி­ ணக்­கத்துக்கும், நல்­லாட்­சிக்கும் முன்­னு­ரிமை கொடுத்து புதிய கவனம் செலுத்த வேண்­டிய தேவை இருக்­கி­றது என்­ப­தே­யாகும்.

புதிய பிளவு

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் ஏற்­க­னவே சிக்­க­லா­ன­தாக இருக்கும் இலங்­கையின் இனத்­துவ உற­வு­மு­றை­களில் புதிய பிளவைத் திறக்­கக்­கூ­டிய சாத்­தி­ய­மி­ருக்­கி­றது. சிங்­க­ள­வர்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய சீர்­தி­ருத்­தங்­களின் வேகம் மற்றும் வீச்­செல்லை குறித்து இலங்கை தொடர்ந்து விவா­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு, இழப்­பீடு மற்றும் பொறுப்­புக்­கூறல் போன்ற முக்­கி­ய­மான விவ­கா­ரங்கள் குறித்து இன்­னமும் ஆரா­யப்­பட்­டு­வரும் நிலையில் இன்னும் சில­வகைப் பதற்றங்­களும் தொடர்ந்­தி­ருக்­கவே செய்­கின்­றன.

சிங்­கள, - தமிழ் நல்­லி­ணக்கம் தொடர்­பி­லான செயன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்ற நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் இலங்கை சமூ­கத்தில் புதிய காயங்­க­ளையும் பிள­வு­க­ளையும் திறக்கும் அச்­சு­றுத்­தலைக் கொண்­டுள்­ளன. அத்­துடன் புதிய கேள்­வி­க­ளையும் கிளப்­பு­கின்­றன.

தமிழ் - முஸ்லிம் வன்­முறை நிகழ்­வுகள்

மட்­டக்­க­ளப்பில் சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் உள்­நாட்­டுப்போர் கால­கட்­டத்தில் கிழக்கில் தமி­ழர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான வன்­மு­றைகள் பற்­றிய நினை­வு­ களை மீளக்­கி­ளறி விடுமா? உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய சீற்­றத்தைத் தங்­க­ளுக்கு அனு­கூ­ல­மாகப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வாத சிங்­கள, பௌத்த அமைப்­புக்கள் (கடந்த வருடம் மே மாதம் கண்­டியில் நாம் கண்­டதைப் போன்று) முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களை மீண்டும் ஆரம்­பிக்­குமா? முஸ்­லிம்­க­ளி­னதும் சிங்­கள பௌத்­தர்­க­ளி­னதும் வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ சமூகம் பழி­வாங்­கலில் நாட்டம் காட்­டுமா?

சிக்­க­லா­னதும் எளிதில் தீப்­பற்­றக்­கூ­டி­ய­து­மான இந்த நிலை­வரம் தேசிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றுக்கு நாடு ஒன்­று­பட வேண்­டிய தேவையை உணர்த்தி நிற்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான அர­சியல் வேறு­பாட்­டையும் மனக்­க­சப்­பையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கு­கையில், அத்­த­கைய தேசிய கலந்­து­ரை­யா­ட­லுக்குத் தலைமை தாங்­கக்­கூ­டி­யவர் யார் என்­பது குறித்து உன்­னிப்­பாகச் சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

மதத்தலைவர்களின் பங்களிப்பு

இதுவிடயத்தில் முன்னுதாரணமாகப் பின் பற்றக்கூடிய நடத்தைகளை மதத் தலைவர்களும், அவர்களைப் பின்பற்று கின்ற இளைஞர் குழுக்களும் வெளிக்காட் டியிருக்கிறார்கள். குண்டுத்தாக்கு தல்களுக் குப் பின்னரான சூழ்நிலைகளில் அதிமேற் றானியார் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடைப் பிடித்த அணுகுமுறை நிறைவமைதியுடை யதும், பெருமைப்படத்தக்கதுமாகும்.

இஸ்லாமிய அச்சக்கோளாறு

இந்தியாவிலும், எனது சொந்த நாட்டிலும் ஏற்கனவே அதிகரித்து வந்திருக்கின்ற இஸ் லாமிய அச்சக்கோளாறு இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. தற் போதையதைப் போன்ற நெருக்கடியான நிலைவரத்தைக் கையாள்வதற்கு அரசியல் தலைவர்கள் மீதல்ல, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் பலத்தின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட நலன்களையும் குறுகிய நோக்குடனான கட்சி நலன்களையும் மனதிற்கொண்டு செயற்படுவதில் நாட் டம் காட்டக்கூடியவர்கள். கடந்த வருட இறுதியில் இலங்கையில் மூண்ட அரசி யல் மற்றும் அரசியலமைப்பு நெருக் கடி, அரசியலமைப்புப் பேரவை மற்றும் நீதித் துறை போன்ற சுயாதீன மான நிறுவனங் கள் வகிக்கக்கூடிய முக்கியத்துவமான பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதிலும், சுபீட்சமடைவதிலும் இலங்கைக்கு இருக் கக் கூடிய நம்பிக்கையை மீள நிலை நிறுத்த வேண்டுமானால் இந்த சுயாதீனமான நிறுவனங்கள் தொடர்ந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.