தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடனும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. 

மேலும், கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்தோடு, உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் நிகழ்வோடு தொடர்புப்பட்ட பல நிகழ்வுகளும் இதில் இடம்பெறவுள்ளதாக இராணுவசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .