இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட  ஒருதொகை தங்கத்துடன் இருவரைக் கைது செய்துள்ளதாகச் சென்னை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட குறித்த தங்கம் ஒரு கிலோ 40 கிராம் என்றும் அவை சுமார் ஒரு கோடிக்கும் அதிக மதிப்புள்ளவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சென்னை விமான நிலைய சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.