மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வலையை இழுப்பதற்கு படகில் இருந்து கடலுக்குள் குதித்தபொழுது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் நேற்று வாகரை மாங்கேணியை அண்டிய கடல் பகுதியில் இடம்பெற்றிருந்ததுடன் சடலமும் அன்றைய தினமே மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மாங்கேணி மாவடியோடையைச் சேர்ந்த கே. தவசீலன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.