(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் சர்வதேச போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவுமே தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிந்திருந்தும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அவசரகாலச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் எந்த நோக்கத்துக்கு அதனை அமுல்படுத்தினோமோ அதனை இன்று மேற்கொள்கின்றதா என்பது கேள்விக்குறியாகும். தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக பழிவாங்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.