போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

402 கிராம் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 2015 ஆம் ஆண்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 34 கிராம் 75 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.