சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 180 அரிய வகை சங்குகள் பறிமுதல்..!

Published By: Daya

08 May, 2019 | 02:50 PM
image

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, 180 அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அரிய வகை கடல் பொருட்கள் கடத்தப்படுகிறது’ என, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 



அப்போது, சென்னையைச் சேர்ந்த ஜமீல் உசேன் (46), யூனுஸ் (37), நூர் முகமது (32), அலாவுதீன் (38), நாகூர் மீரான்(32) உள்ளிட்ட 6 பேர் குழுவாக சிங்கப்பூர் செல்ல வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 6 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே, அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அரிய வகையான பச்சை நிற சங்குகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் இந்த அரிய வகை பச்சை நிற சங்குகளில் ஒன்று மட்டும்,  சிங்கப்பூரில் 50 டொலர் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 6 பேரிடம் இருந்த 180 சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 6 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52