இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தூதுவர் திரு. தோர்ஸ்டென் பார்க்பிரெட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.