(ஆர்.விதுஷா)

கொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   

கிரேண்ட்பாஸ், தெஹிவளை மற்றும் கொஹூவல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிரேண்ட்பாஸ், ஸ்டேஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12.19 கிரேம் ஹெரோயினுடன் பெலகல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை - படோவிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2.62 கிரேம் நிறையுடைய ஹெரோயினுடன் கல்கிசை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கொஹூவல பகுதியில் 1.75 கிரேம் ஹெரோயினுடன் 26 வயதுடைய  அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.