(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் மூலமாக சபைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் தெரிவித்தார். 

கடந்த 21 ஆம் திகதி தாக்குதலையடுத்து ஜனாதிபதியினால் மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே இந்த அறிக்கையை சபைக்கு ஒப்படைக்க வேண்டும்,

 பாராளுமன்றத்தில் ஒரு பிரதியை பெற்றுத்தரவேண்டும்  எனவும் இதன் தன்மைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் கோரிக்கை ஒன்றினை விடுத்தார்.

இதன்போது பதில் தெரிவித்த சபாநாயகர் :- இந்த அறிக்கையின் பிரதியை பாராளுமன்றத்தில் சமபர்ப்பிக்க கடிதம் மூலமாக அறியப்படுத்தி ஜனாதிபதி செயலாளர் மூலமாக அதற்கான நடவடிக்கையை எடுக்க அறிவிக்கின்றேன் 

இதனையடுத்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சாந்த பண்டார எம்.பி:- இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் அறியத்தர நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றார்.