(செ.தேன்மொழி)

திருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் பகுதிகளில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் கடற்பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, நிலாவெளி , மதுரங்குலி , நீர்கொழும்பு மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 - 43 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து மீன்பிடி படகுகள் , வெளி இணைப்பு மோட்டார்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி வலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது. 

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்டைத்துள்ளனர்.