வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் 32 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, சுண்டிக்குளம், வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேரையும் ,மட்டக்களப்பு - பெரிய உப்போடை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இருவருரையும் காங்கேசன்துறை மற்றும் கிழக்கு  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் பயணித்த படகில் இருந்த ஒட்சிஜன் சிலின்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். 

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மீன்பிடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.