வெளி­நா­டு­க­ளில் உள்ளோர் இலங்கையிலுள்ள நமது உறவுகளுக்கு தபால் சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படும் பணத்தினை உரியவர் கையில் வீட்டுக்கே கிடைக்கும் வகையில் தபால் சேவை மாற்றங் காணவுள்ளது என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய கலாசார அமைச்சருக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று அக்கரைப்பற்று நௌபர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.