- வீ.பிரியதர்சன் 

இந்து சமுத்­தி­ரத்தின் நடுவே இந்­திய உப­கண்­டத்­திற்கு கீழே உள்­நாட்­டுப்போர் ஓய்ந்து வெடிச்­சத்­தங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்டு அமை­தி­யாக ஓய்­வெ­டுத்­துக்­கொண்­டி­ருந்த இலங்­கைக்கா இந்த நிலை­யென்று ஏனைய உல­க­நா­டுகள் கன்­னத்தில் கைவைக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது இன்று இலங்கை !

இலங்­கையில் கடந்த 30 வரு­ட­கால உள் ­நாட்­டுப்போர் ஓய்ந்து பௌத்தம், இந்து, கிறிஸ்­தவ மற்றும் இஸ்லாம் மதங்­களைப் பின்­பற்றும் மூவி­னத்­த­வர்­களும் இணைந்து கடந்த வரு­டங்­க­ளாக ஒரே தேசியக் கொடியின் கீழ் கட்­டிக்­காத்து வந்த நல்­லி­ணக்க செயற்­பாட்­டுக்கு கரும்­புள்­ளி­யாக அமைந்­தது கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்­தன்று தீவிர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொ­லைத்­தாக்­கு­தல்கள்.

இலங்கை மக்­க­ளுக்கு சுதந்­திரம் கிடை த்த காலத்­தி­லி­ருந்து இலங்கை மக்கள் சுதந்­திரக் காற்றைச் சுவா­சித்­தி­ருப்­பார்­களா என்று ஆராய்ந்து பார்த்தால் அதிலும் ஐயப்­பாடே நில­வு­கின்­றது !

யுத்தம் நிறை­வ­டைந்து இலங்கை மக்­களின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு எத்­த­னையோ உல­க­நா­டுகள் பின்­நிற்க மனித மனங்­களா அல்­லது மதங்­களா இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப பிர­தான பங்­காற்­றப்­போ­கின்­றன என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் மதங்­க­ளுக்­கி­டை­யே­யான ஒற்று­மை­களின் மூலம் இந்த நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யு­மென்ற நிலையில் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லி­ணக்கம் மெது­மெ­து­வாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டு­ வந்­தது.

தற்­கொலைத் தாக்­கு­தலால் கேள்­விக்­குள்­ளான நல்­லி­ணக்கம் 

இலங்­கையில் மதத்தின் பெயரைப் பயன்­ப­டுத்தி ஒரு குழு கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீதும் இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் மேற்­கொண்ட மிலேச்­சத்­த­ன­மான தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் 250க்கும் மேலான உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­ட­துடன் பலர் காய­ம­டைந்த நிலையில் தற்­போதும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரு­கின்­றனர். இதனால் வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட சிறு­பிள்­ளைகள் எனப் பல உயிர்கள் அநி­யா­ய­மாகக் காவு­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திக­திக்குப் பின்னர் நாட்டில் குண்டுச் சத்­தங்கள் ஓய்ந்­த­நி­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலால் இலங்கை மண்ணே சோகத்தில் ஆழ்ந்­தது மட்­டு­மல்­லாது பல உல­க­நா­டு­க­ளையும் உலக அர­சியல் தலை­வர்­க­ளையும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இதனால் இலங்கை மண்ணில் கடந்த 9 வரு­டங்­க­ளாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டு­வந்த நல்­லி­ணக்­கத்­திற்குப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் அனைவர் மன­திலும் பய­மாகத் தொற்­றிக்­கொண்­டது.

இந்த நல்­லி­ணக்கம் குறித்து, குண்­டுத்­தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்கள் எவ்­வா­றான மன­நி­லை­யி­லுள்­ளனர் என்று அறி­-வ­தற்­காக நாம் ஒரு கள ஆய்­வினை மேற்கொண்டு நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்­டிய பகு­திக்குச் சென்­றி­ருந்தோம்.

நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய மக்­களின் மனதில்.......

துய­ரச்­சம்­பவம் இடம்­பெற்று இரு­வா­ர­கால நிறைவில் ஐயோ என்ற கதறல் சத்­தங்கள் சற்று ஓய்ந்த நிலையில் அனைவர் முகத்­திலும் ஒரு­வித சோகமும் கேள்­வி­களும் ஆட்­கொண்ட நிலையில் எங்கும் நிசப்­த­மான சூழலில் எங்கு திரும்­பி­னாலும் மரண வீடுகள் இடம்­பெற்ற காட்­சி­க­ளையே நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­ல­யத்­திற்கு அரு­கி­லான பகு­திகள் வெளிப்­ப­டுத்­தின.

அங்­கு­சென்ற எம்­மையே ஒரு­வித சோகம் ஆட்­கொண்­டது. நாட்டின் தற்­போ­தைய நிலையை சிந்­திக்கத் தூண்­டி­யது. இவ்­வாறு தமது தாய், தந்தை, பிள்­ளைகள் என்று ஒவ்­வொரு வீட்டிலும் தமது உற­வு­களைப் பறி­கொ­டுத்த நிலையில் இருந்த மக்­களின் மனதில் அவர்­க­ளுடன் உரை­யாடும்போது கவ­லைகள், கோபங்கள், ஏக்­கங்கள், வலிகள் நிறைந்­தி­ருந்­தாலும் நாட்டின் ஒற்­றுமை, நல்­லி­ணக்­கத்­திற்­காக  அவர்கள் சிந்­திப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.

இவ்­வாறு அவர்­க­ளுடன் நாம் உரை­யா­டும்­போது அவர்­களின் கவ­லைகள், வலி­க­ளுக்கு மத்­தியில் நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்­காக அவர்­களில் ஒரு சிலர் பகிர்ந்து கொண்­டவை....

அன்பையே நாம் எதிர்பார்க்கின்றோம்....

கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ஆல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் எனது உற­வி­னர்கள் பலர் கொல்­லப்­பட்­ட­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.

எனது 70 வய­து­டைய மாமி­யாரும் அக்­கா­வொ­ரு­வரின் 8 மாதக் குழந்­தையும் தற்­கொலைத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் அக்­காவும் அவரின் 7 மற்றும் 5 வய­து­டைய இரு மகள்­மார்­களும் காய­ம­டைந்­துள்­ள­துடன் 5 வய­து­டைய மகள் தொடர்ந்தும் வைத்­தி­ய ­சா­லையில் சிகிச்­சை­பெற்­று­ வ­ரு­கிறார் என கட்டுவாபிட்டியைச் சேர்ந்த ஜூட் தெரிவித்தார்.

நாம் இந்தத் துக்­கத்­தி­லி­ருந்து மீள முடியா­தென நான் நினைக்­கின்றேன். பெரும் மன­உ­ளைச்­ச­லையும் வேத­னை­யையும் இனம்­தெ­ரி­யாத கோபத்­தையும் வர­ழைத்­துள்­ளது. இதற்கு யார் பொறுப்பு... நாங்கள் செய்த தவறா... எதிர்­காலம் என்ற ஒன்றில் நம்­பிக்­கை­யில்­லாது போய்­விட்­டது. 

மீண்டும் சமூ­கத்தில் நல்­லி­ணக்­கத்­துடன் இணைந்து வாழ்­வ­தென்­பது நினைத்­துப்­பார்க்க முடி­யா­தது. கிறிஸ்­த­வர்கள் என்­பது உண்டு மகிழ்ந்து பகிர்ந்து மற்­ற­வர்­க­ளுடன் ம­கிழ்ச்­சி­யாக வாழ்­ப­வர்கள். கிறிஸ்து உயிர்த்த நாள் என்­பது எமக்கு மகிழ்­சிக்­கு­ரி­ய­நா­ளாகும் குரல் தள­த­ளக்­கின்­றது. ஆனால் இன்று..... அவரால் வார்த்­தை­களை உதிர்க்க முடி­ய­வில்லை.

எதிர்­கா­லத்தில் பணம் சம்­பா­தித்து ஏனைய மக்­க­ளுடன் இணைந்து பகிர்ந்து வாழ­வேண்­டு­மென்ற எண்­ணமே இல்­லாது போய்­விட்­டது. அர­சாங்கம் என்­னதான் பண உத­வி­செய்­தாலும் பலி­யா­ன­வர்­களின் பிரிவைப் பணத்தால் ஈடு செய்­து­விட முடி­யாது.

அதி­க­மான பௌத்­தர்கள் எம்மைப் பார்த்துவிட்டு உண்­ப­தற்கு பிஸ்கட் பைக்­கற்­று­க­ளை­யா­வது வாங்கி வந்­தார் கள். ஏனைய இனத்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து அன்­பையே நாம் எதிர்­பார்க்­கின்றோம் விரோ­தத்­தையோ, குரோ­தத்­தை­யோவல்ல. 

கடந்த காலங்­களில் நாம் உண­வுப்­பொ­ருட்கள் என்­றா­லென்ன வீட்­டுக்கு வர்­ணப்­பூச்­சுகள் வாங்­கு­வ­தென்றால் என்ன முஸ்லிம் சகோ­த­ரர்­களின் கடை­க­ளி­லேயே வாங்குகின்றோம். எமது இனத்­த­வர்­களின் கடை­க­ளை­விட அவர்கள் குறைந்த விலை­க­ளி­லேயே பொருட்­களை விற்­பனை செய்­வார்கள் ஆனால் அந்த தீவி­ர­வா­திகள் செய்த செய­லுக்­காக நாம் அப்­பாவி முஸ்லிம் சகோ­தர மக்­களைத் தாக்­க­மு­டி­யாது.

ஆனால் அர­சாங்கம்தான் முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­க­வேண்டும். ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான அர­சியல் போட்­டியே அப்­பாவி மக்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­ட­மைக்குக் காரணம்.

நாட்டில் ஜனா­தி­பதி இருக்கும் போதே அடுத்த ஜனா­தி­பதி யார் என்று கீழ்த்­த­ர­மாக நடந்­து­கொள்­கின்­றார்கள். இவர்­களின் அதி­கார ஆசையால் நாம் இன்று உற­வு­களை இழந்து தவிக்­கின்றோம். உல­கத்தில் இவ்­வா­றான கீழ்த்­த­ர­மான அர­சியல் எங் கும் இடம்­பெற்­ற­தில்லை. 

வீதியில் நாயொன்று இறந்து கிடந்தால் கூட பாது­காப்புத் தரப்பு பதி­ல­ளிக்க வேண்டும். ஆனால் இன்று நாயை­விடக் கேவ­ல­மாக கொல்­லப்­பட்­டுள்­ளனர் எமது உற­வுகள். பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் சொல்­லுக்கு நாம் அடி­ப­ணிந்து இருக்­கின்றோம். ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பாட்­டுக்­காக அப்­பாவி முஸ்லிம் சகோ­தர இனத்­த­வர்­களைத் தண்­டிக்க முடி­யாது. தீவி­ர­வா­தி­க­ளுக்குத் தேவை இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தங்­களை உண்­டு­பண்ணி வன்­மு­றையைத் தூண்­டு­வதே ஆகும். இதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளினால் மக்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. குற்றம் செய்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் முஸ்லிம்  சகோ­த­ரத்­த­வர்­களே வர்த்­த­கத்­து­றையில் முன்­னி­லை­யி­லுள்­ளனர். அவர்­களைக் கைவிட்­டு­விட்டு எம்மால் தனித்து செயற்­ப­ட­மு­டி­யாது.

நாட்டில் தீவி­ர­வா­தி­களை முற்­றாக இல்­ல­தொ­ழிக்க வேண்டும் அப்­போதே மக்கள் நிம்­ம­தி­யான வாழ்க்­கையை வாழ முடியும்.

பல்­லி­னங்­க­ளைக்­கொண்ட நாட்டில் பிரிந்­து­வாழ முடி­யாது. எல்­லோரும் ஒன்­று­பட்­டாலே நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும். மக்­களின் மனங்­களில் உள்ள காயங்­களை ஆற்றி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே விரி­ச­லை­யேற்­ப­டுத்தி அர­சியல் இலாபம் தேடக்­கூ­டாது. ஆனால் அர­சி­யல்­வா­திகள் தற்­போது அத­னையே செய்­து­கொண்டு இருக்­கின்­றனர்.

அப்பாவி மக்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டிய நிலை

கட்டுவாப் பிட்டியைச் சேர்ந்த சாந்தினி தெரிவிக்கையில்,

அம்மா எங்­க­ளை­விட்டுப் பிரிந்து விட்டார்.  ஐயோ இந்த அர­சாங்கம் ஏன் இப்­ப­டிச்­செய்­து­விட்­டது. கண்­க­ளி­லி­ருந்தும் கண்ணீர் வழிந்­தோட அவரின் முகத்தில் கடும் கோபத்தைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அம்­மாவை இந்த அர­சாங்கம் கொலை செய்­து­விட்­டது... எனக்கூறி கதறி அழு­கின்றார்....

எம்மைச் சுற்­றி­யி­ருந்த அய­ல­வர்­களில் அரை­வா­சிப்பேர் பலி­யா­கி­விட்­டனர். இதற்கு அர­சாங்­கமே முழுப்­பொ­றுப்­பை யும் ஏற்­க­வேண்­டு­மெனக் கடும் கோபத்­துடன் தெரி­வித்தார். இந்தக் கிரா­மத்­திற்கே அர­சாங்கம் பாவம் செய்­து­விட்­டது. அர­சி­யல்­வா­தி­க­ளுக்குத் தெரிந்­தி­ருந்தும் ஏன் எம்மைப் பாது­காக்­க­வில்லை. பாவம் இந்த மக்கள். நாம் யாருக்கு என்னத் ­தீங்­கி­ழைத்தோம். ஐயோ..... ஏன் இந்த நிலை­மை­யென கதறி அழு­கின்றார்.......

மனி­தர்­க­ளி­டேயே காணப்­படும் இரக் கம், ஒற்­றுமை இந்த அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மில்லை. அசம்­பா­விதம் இடம்­பெ­றப்­போ­கின்­றது என அர­சாங்கம் அறிந்தும் பாது­காக்­க­வில்லை.

யுத்­தத்தின் கொடூ­ரத்தை நாம் தொலைக்­காட்­சி­களில் தான் அவ­தா­னித்­துள்ளோம். ஆனால் அன்று நாம் யுத்­தத்தை நேரில் அவ­தா­னித்­த­போது சொல்ல வார்த்­தைகள் இல்லை. தற்­போது வீதியில் ஒருவர் பையை மாட்­டிக்­கொண்டு செல்லும் போது அச்­சத்­துடன் பார்க்­க­வேண்­டிய நிலை­யேற்­பட்­டுள்­ளது. அப்­பாவி மக்­க­ளையும் தீவி­ர­வா­தி­க­ளாகப் பார்க்க வேண்­டிய நிலை­யையே இந்த அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது. தீவி­ர­வா­திகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் சிறு­குற்றம் செய்யும் அப்­பாவி மக்­களை அர­சாங்கம் சிறை­யி­ல­டைக்­கின்­றது.

அர­சி­யல்­வா­திகள் மற்றும் தீவி­ர­வா­தி­களின் தவ­று­க­ளுக்­காக நாம் முஸ்லிம் சகோ­த­ரர்­களைத் தண்­டிக்க முடி­யாது.

வழிதடுமாறும் 3 இளம் பிஞ்சுகள்

தாயையும் தந்­தை­யையும் இழந்து ஒரு பெரிய பங்­க­ளாவில் வெளிச்­ச­மற்ற நிலையில் 3 சகோ­த­ரர்கள் அமர்ந்­தி­ருந்­தனர்.

வீட்டின் வெளியில் தாய் மற்றும் தந்­தை­யரின் அஞ்­சலிப் பதா­தைகள் தொங்­கு­கின்­றன. வீட்­டிற்குள் நாம் நுழைந்தோம். அங்கு அவர்­க­ளுடன் கதைப்­ப­தற்கே மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை. பெற்­றோர்கள் இன்றிப் பிள்­ளைகள் அநா­தை­க­ளாக இருந்த நிலையை எம்மால் ஒரு­கணம் எண்­ணிப்­பார்க்க முடி­ய­வில்லை.

தந்தை, தாய் 3 பிள்­ளை­க­ளுடன் 5 பேர­டங்­கிய அழ­கிய குடும்பம் தந்­தையார் ஆயுள்­வேத வைத்­தியர் மற்றும் கட்­டான நகர சபை உறுப்­பினர், பிள்­ளை­களில் மூத்­தவர் பெண், அவர் சீனாவில் மருத்­து­வத்­து­றையில் கல்­வி­ப­யில்­கின்றார். மற்றைய இரு ஆண் பிள்­ளை­களில் ஒருவர் கல்­விப்­பொ­துத்­த­ரா­தர சாதா­ர­ண­த­ரத்தில் கல்­வி­ ப­யில்­கின்றார் மற்­றை­யவர் தரம் 7 இல் கல்வி பயில்­கின்றார்.

ஆல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் சம்­பவ இடத்­தி­லேயே பெற்­றோர்கள் மர­ணித்­துள்­ளனர். 

இதை­ய­டுத்துப் பிள்­ளைகள் அநா­தை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் மனதில் எவ்­வி­த­மான உணர்­வுகள் பதி­யப்­ப­டப்­போ­கின்­ற­னவோ............

எமக்கிடையில் எவ்வித இனப்பாகுபாடுமில்லை

அம்­மாவும் அப்­பாவும் பலி­யா­கி­விட்­டார்கள். அப்­பாவின் கால்­க­ளுக்கு முன்­பா­கவே தற்­கொ­லைக்­குண்­டு­தாரி குண்­டினை வெடிக்­கச் ­செய்தார். அம்­மாவும் அப்­பா வும் கட்­டி­ய­ணைத்­த­ப­டியே மர­ணித்­துக்­கி­டந்­தார்கள் என கட்டுவாப்பிட்டியைச் சேர்ந்த ரொசிக்கா விமான கண்ணீருடன் கூறுகையில், 

எம­து­பெற்­றோர்கள் சுக­யீ­ன­ம­டைந்து மர­ணித்­தி­ருந்­தால்­கூட பெரி­ய­தொரு கவலை இருந்­தி­ருக்­காது, திடீ­ரென அம்மா, அப்பாவை பிரிந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து நாம் மீளவில்லை. அர­சாங்கம் சரி­யான நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் எனது அம்­மாவும் அப்­பாவும் உயி­ருடன் இருந்­தி­ருப்­பார்கள். இந்த அர­சி­யல்­வா­திகள் பாது­காப்­புடன் செல்­கின்­றனர். அப்­பாவி மக்­களை இவர்கள் ஒரு எள்­ள­ளவும் கருத்­தில்­கொள்­ள­வில்லை. எமக்கு இடையில் எவ்­வித இனப்­பா­கு­பா­டு­மில்ல. இது எமது தவ­று­மில்லை. பெற்­றோர்­களின் தவ­று­மில்லை. அர­சாங்­கத்தின் தவறே நிகழ்ந்­துள்­ளது.

கட்சி, மத, இன வேறு­பாடு இன்றி செயற்­ப­டு­வதே எமது எதிர்­பார்ப்பு. எமது பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் அத­னையே கூறு­கின்றார்.

இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தனால் எவ்­வித பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஆனால் தவறு செய்­த­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டுமே தவிர அப்­பாவி மக்­க­ளல்ல.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படமாட்டோம்

நீர்­கொ­ழும்பு அங்­கு­ரு­கா­ர­முல்ல போதி­ராஜா ராமய விகா­ரா­தி­பதி யட்­ட­வத்த ஞானா­ராம தேரர் தெரிவிக்கையில்,

தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்றபோது விகா­ரை­யி­லேயே இருந்தேன். சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்­துள்ள உற­வு­க­ளுக்கு எனது அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். கடந்­த­ தி­னங்­களில் மர­ண­வீ­டு­களில் கலந்­து­கொண்டு ஆறு­தல்­க­ளையும் கூறினேன். இந்தச் சம்­ப­வத்­திற்கு அர­சாங்­கத்தில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் பொறுப்புக் கூற வேண்டும். ஜனா­தி­பதி, பிர­தமர், பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர்கள், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ஆகியோர் பொறுப்­புக்­கூற வேண்­டும்.

நீர்­கொ­ழும்புத் தொகு­தியில் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என அனை­வரும் கலந்து வாழ்­கின்­றனர். ஒரு கட்­டத்தில் அனை­வரும் அன்­னி­யோன்­ய­மாகப் பழகி வாழ்ந்து வந்­தார்கள்.

இந்த சம்­ப­வத்தால் மக்­களின் மனங்­களில் அதி­ருப்தி நிலை­யேற்­பட்­டுள்­ளது. அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும். மீண்டும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் தற்­போது சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் பதற்­ற­மான சூழ்­நி­லையை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஒவ்­வொரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் காணப்­படும் ­வி­சு­வா­ச­மற்ற தன்­மையைக் களைந்­தெ­றிய வேண்டும்.

முஸ்லிம் சகோ­த­ரர்கள் இந்தச் சம்­ப­வங்­களில் தொடர்­பு­ப­டா­விட்­டாலும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை இந்தச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தேர்­தலை இலக்­கு­வைத்து அர­சி­யல்­வா­திகள் செயற்­ப­டக்­கூ­டாது நாட்டின் அனைத்து இன மக்­களின் பாது­காப்பை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். அப்­போதுதான் நாட்டில் நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும். இடம்­பெற்ற கோரச்­சம்பவம் போன்று எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றா­தி­ருக்க அர­சாங்கம் உறு­தி­பூ­ண­வேண்டும்.

இந்த பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் மக்­களும் அச்­சத்­து­ட­னேயே வாழ்­கின்­றார்கள். கடந்த காலங்­களில் முஸ்லிம் மக்கள் மிகவும் அன்னி­யோன்­ய­மாகப் பழ­கி­னார்கள். நான் அவர்கள் வசிக்கும் இடத்­திற்குச் செல்லும்போது எனக்கு வழங்­க­வேண்­டிய மரி­யா­தையை சரி­யாகச் செய்­வார்கள், ஆனால் சம்­பவம் நடை­பெற்ற தினத்­தன்று இரவு 7 மணி­ய­ளவில் நான் வீதியில் பயணம் செய்­த­போது அச்­சத்­து­ட­னேயே முஸ்லிம் மக்களின் பார்வை இருந்­தது. அந்த மக்கள் மத்­தியில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அச்­சத்­தையும் அவ­வி­சு­வா­சத்­தையும் இல்­லாமல் செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

கண்டி திக­னயில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தை­ய­டுத்து இங்­குள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு பிரச்­சினை வரக்­கூ­டா­தென நினைத்து இங்­குள்ள மக்­க­ளிடம் சென்று பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி வந்தேன்.

ஆனால் எவரோ செய்த சதி­யினால் அந்­த­மக்கள் அச்­சத்­துடன் வாழும் நிலை­யேற்­பட்­டுள்­ளது. நாம் ஒரு­போதும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட மாட்டோம். ஒரு இனம் தம்மைத் தாக்­கி­வி­டுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்­க­ளிடம் தோன்­றி­யுள்­ளது. இந்த அச்­சத்தை இல்­லாது செய்ய அர­சாங்கம் சரி­யான அணு­கு­மு­றை­களை கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் முன்­னெ­டுக்­க­வேண்டும். 

ஆனால் அர­சாங்கம் இதைச் சரி­யாகச் செய்யுமா என்ற சந்­தேகம் தற்­போது எம்­மிடம் தோன்­றி­யுள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையே குழப்­ப­தை­யேற்­ப­டுத்தி வாழ வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. ஒற்­று­மையின் மூலமே நாட்­டைக்­கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதுவே எமது தேவை. ஜனா­தி­பதி தற்­போ­து­வரை எடுத்­துள்ள அணு­கு­மு­றை­களில் கூட எனக்குத் திருப்­தி­யில்லை தனது பொறுப்­புக்­களைச் சரி­யாகச் செய்­ய­வில்­லை­யென்றே எண்­ணத்­தோன்­று­கின்­றது.  எனவே அர­சியல் இலாபம் தேடாது அனைத்து இனங்­க­ளையும் ஒன்­றி­ணைத்து நாட்டை முன்­னோக்­கி­க்கொண்டு செல்­ல­வேண்டும்.

தாக்குதலின் பின்னும் சகோதரர்கள் போல் வாழ்கின்றோம்

கடந்த 21 ஆம் திகதி காலையில் தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தலை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஏனைய மதங்­க­ளையும் ஏனைய இனத்­த­வர்­க­ளையும் பாது­காக்க வேண்­டு­மென்றே இஸ்லாம் கூறு­கின்­றது என நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழும் மௌலவி சப்றி மிகவும் கவலையுடன் பகிர்ந்து கொள்கையில்,

குட்டி ரோம் என்று அழைக்­கப்­படும் அனைத்து இன மக்­களும் வாழும் பிர­தே­ச­மான நீர்­கொ­ழும்பு பிர­தேசம் அமை­தி­யா­ன­தொரு அழ­கிய பிர­தே­ச­மாக இருந்து வந்­துள்­ளது. 

நாம் பல வரு­டங்­க­ளாக இப்­பி­ர­தே­சத்தில் வசித்து வரு­கின்றோம். குறிப்­பாக பௌத்­தர்கள், கிறிஸ்­த­வர்கள் மற்றும் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் நாம் ஒற்­று­மை­யா­கவும் கண்­ணி­ய­மா­கவும் அன்­னி­யோன்­ய­மா­கவும் தான் வாழ்ந்து வரு­கின்றோம்.

முஸ்­லிம்கள் என்று சொல்­லிக்­கொண்ட ஒரு குழு­வி­னரால் தேவா­ல­யங்­களில் தீவி­ர­வாதத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதற்கும் இஸ்­லாத்­திற்கும் எந்த தொடர்­பு­மில்லை என்­பதை நான் உறு­தி­யாகக் கூறு­கின்றேன்.

இந்தத் தாக்­கு­தலின் பின்­னரும் நாம் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் எமது சகோ­த­ரர்கள் போன்றே வாழ்ந்து வரு­கின்றோம். அவர்­க­ளுடன் பிறந்து வாழ்ந்த இந்தப் பிர­தே­சத்தில் தற்­போதும் அன்­னி­யோன்­ய­மா­கவே வாழ்ந்து வரு­கின்றோம்.

நாங்கள் தீவி­ர­வா­தத்தைத் தூண்­ட­வில்லை. தற்­போது முஸ்­லிம்கள் என்ற ரீதியில் அனை­வரும் கவ­லை­யான நிலை­யி­லேயே இருக்­கின்றோம். இவ்­வாறு இடம்­பெ­று­மென எவ­ருமே எதிர்­பார்க்­க­வு­மில்லை. கன­விலும் நினைக்­க­வில்லை.

மதத்தின் பெயரைக் கூறித் தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் எவர் ஈடு­பட்­டாலும் அதற்கு நாம் இடம்­கொ­டுக்­காது அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ வேண்டும். ஏனென்றால் இலங்கைத் திரு­நாடு ஒரு அமை­தி­யான நாடு நாம் இவ்­வ­ளவு காலமும் அமை­தி­யாக வாழ்ந்த நாடு. இந்த நாடு அமை­தியின் பக்­கமும் செழிப்பின் பக்­கமும் தான் செல்ல வேண்டும். இந்த நாட்டை அழிவின் பக்கம் இழுத்­துச்­செல்வோர் தொடர்பில் அர­சாங்கம்  தகுந்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்தித் நிதா­ன­மான ஒரு உரையை நிகழ்­த்தி­யுள்­ள­துடன் சம்­ப­வத்­தை­ய­டுத்து அவர் ஒரு சிறந்த நட­வ­டிக்­கையை எடுத்து முன்­னு­தா­ர­ண­மாக எமக்குத் திகழ்ந்­துள்ளார்.  அத்­துடன் ஆழ­மான கருத்­துக்­களை முன்­வைத்து முஸ்லிம் மக்­க­ளுக்குப் பெரும் உத­வியை  வழங்­கி­யுள்ளார். முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அவ­ரது கருத்தை வர­வேற்­ப­துடன் அவ­ரது கருத்­திற்கு செவி­சாய்க்­கின்றோம்.

நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்­கு­மி­டையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எம்­மா­லான உத­வி­களை செய்­வ­தற்கு முஸ்­லிம்­க­ளா­கிய நாம் தயா­ரா­க­வுள்ளோம். மத­வாதம், இன­வாதம் பேசு­ப­வர்கள் மீது அர­சாங்கம் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

பேரா­யர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் பார்­வையில்....

கட்­டு­வாப்­பிட்­டிய பகு­தியில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுடன் உரை­யாடும் போது அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் ஆண்­ட­கையின் செயற்­பா­டு­க­ளையும் அவரின் நல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும்  அந்த மக்கள் சோகத்­திலும் வெளிப்­ப­டுத்­தியதை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்தக் கொடூ­ர­மான தாக்­கு­த­லை­ய­டுத்து பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்­டகை குறிப்­பி­டு­கையில்,

இறை­வனின் பெயரைக் கூறி ஒரு இனத்தை அழிப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அது சரி என்று முன்­வைக்­கப்­படும் கருத்­துக்கள் மிகப் பிழை­யா­ன­தொன்­றாகும். இவ்­வாறு மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­குதல் கவ­லை­யடயக் கூடி­யவை.

மனித உயிர்­களை விட உயர்­வான வேறொன்று இந்த உல­கத்தில் கிடை­யாது. எம்மால் இந்த உல­கத்தில் தனித்து வாழ முடி­யாது. எம்­முடன் வாழ்­வ­தற்கு ஏனை­யவர்கள் நிச்­ச­ய­மாக இருக்க வேண்டும். கட­வுளின் பெயரில் ஒரு­வரை அழிக்க முடி­யாது. 

இது மிகப் பிழை­யா­ன­தொரு விட­ய­மாகும். எமது உற­வுகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் உண்­மையில் கவ­லை­யடையக் கூடி­யவை. அவை முழு மனித குலத்­திற்­குமே இழைக்­கப்­பட்ட துரோ­கமும் அநீ­தி­யு­மாகும். உலகில் பிறந்­துள்ள ஒவ்­வொரு மனி­தர்களும் சம­மா­ன­வர்­களே. எனவே பிறி­தொ­ரு­வ­ருக்கு மர­ணத்­தையோ, கவ­லை­யையோ யாராலும் கொடுக்க முடி­யாது.

பயங்­க­ர­வாத தாக்­கு­தலைக் கண்­ட­றிய ஜனா­தி­பதி விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மித்­த­தாக கூறி­யுள்ள போதிலும் அது­கு­றித்த எந்தத் தெளிவும் இல்­லை­யெ­னவும் இந்த விசா­ரணைக் குழுவும் இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களைப் போல செயலிழந்து போய்விடுமோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

உண்மைகளைக் கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயற்படாவிட்டல் நாம் வீதிக்கிறங்க நேரிடும். முடியுமென்றால் இந்த விடயத்தில் மாத்திரம் தீர்வுகளைக் காண சகல கட்சிகளையும் இணைத்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குங்கள் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்துள்ளார். 

இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்த இளைஞர்களுக்குக் கூட ஏன் செய்தோம் என அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த சம்பவத்தை வைத்து அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை யாரும் நிந்தித்துவிடக் கூடாது என உறுதிபட கூறினார்.

நேரடியாகச் சென்று நடவடிக்கை

இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் நேரடியாகச் சென்று கட்டுவாப்பிட்டிய கிராமசேவகர் சுனில் பெர்னாண்டோவிடம் வினவினோம். 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இறப்பு மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லையெனவும். 

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நேரடியாகத் தாம் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மக்களின் ஏக்கங்கள்.....

கடந்த கால உள்நாட்டுப்போரின் வடுக்களை சுமந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறிது காலம் நல்லிணக்கம் சகவாழ்வுகள் வளர்க்கப்பட்டு ஒரு சிறிய மரமாக துளிர்விட்ட நிலையில் மக்கள் மத்தியில் மதங்களால் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நல்லிணக்கத்திற்கு சவாலாக அமைந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் எந்தவொரு அரசியல்வாதியினாலோ அல்லது எந்த ஒரு கட்சியினாலோ உருவாக்க முடியாதென்ற சிந்தனையில் உள்ளார்களென்பதுடன் அவர்கள் ஒவ்வொருவரின் அமைதியும் சிந்தனையும் இலங்கையின் எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் இலங்கையின் அரசியலிலும் தாக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை...

கடந்த கால அனுபவங்களை வைத்து நாட்டு மக்கள் நாட்டை வழிநடத்தும் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஏதோவொன்றைக் கூற விளைகின்றார்கள்!