வீட்டை உடைத்து உள்நுளைந்த முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி 20 பவுண் தங்க நகைகளையும், 75000 பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

நேற்று திங்கட்கிழமை (06.05.2019) அதிகாலை 1.00  மணியளவில் யாழ்.புலோலி தெற்கு, உபயகதிர்காமம், கந்தமுருகேசனர் வீதியில் உள்ள ஓர் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அதிகாலை வேளையில் கதவை உடைத்து உள்நுளைந்த நான்கு முகமூடிக் கொள்ளையர்கள் வாள் ஒன்றினை வீட்டாரின் கழுத்தில் வைத்து சத்தமிட்டால் கொலை செய்து விடுவோம் என அச்சுறுத்தி வீட்டை சல்லடை போட்டு தேடுதல் நடத்தி அங்கிருந்த 20 பவுண் தங்க நகை , 75000 ரூபா பணம்,  இரண்டு தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ள  நிலையிலும்,  இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி  மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.