நாட்டின் சில பகுதிகளில் பன்னிரெண்டரை மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாதுவை, களுத்துறை வடக்கு,தெற்கு பகுதி,கட்டுக்குருந்த, நாகொட, பேருவளை, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில்  நாளை புதன்கிழமை காலை 8 மணிமுதல் 12 ½  மணித்தியாலங்கள்   நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே  அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.