அமெரிக்காவுக்குச் சொந்தமான பிரெபிள் மற்றும் சுங் ஹூன் என்ற இரு போர்க் கப்பல்கள் அனுமதியின்றி தென் சீனக் கடற்பரப்பில் நுழைந்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர், சீன அரசின் அனுமதியைப் பெறாமல், தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்குச் சொந்தமான தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் இரு போர்க்கப்பல்கள் சென்றன. 

இதையடுத்து, சீன எல்லையை விட்டு விலகிச் செல்லுமாறு அந்தப் போர்க்கப்பல்களிடம் சீனக் கடற்படையினர் தெரிவித்தனர். இதன் பின்னரே இரு கப்பல்களும் அப் பகுதியை விட்டு சென்றன.

இவ்வாறான அமெரிக்காவின் அத்துமீறல் செயற்பாடானது சீனாவின் இறையாண்மையையும், பிராந்திய அமைதியையும் குலைக்கக்கூடிய செயற்பாடாகும் என்றார்.