திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள  வீட்டில் வைத்து நேற்று  காலை இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் ஜீப் ஒன்றில்  கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யா­கிய புலி­களின் முன்னாள் அம்­பாறை மாவட்ட தள­பதி ராம் என்­பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள அவரது வ வீட்டில் வைத்து நேற்று காலை 8.30 மணியளவில் நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த சிலரால், தனது கணவர் கடத்தப்பட்டதாக அவ­ரது மனைவி சுதா­ராணி திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலே அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

விடு­தலைப் புலி­களின் அம்­பா­றை­மா­வட்ட தள­ப­தி­யாக இருந்து 2009 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­னரால் திரு­கோ­ண­ம­லையில் வைத்து கைதுசெய்­யப்­பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடு­த­லை­யானார். 

அதன் பின்னர் திரு­மணம் முடித்து திருக்­கோவில் தம்­பி­லுவில் பிர­தே­சத்தில் வாடகை வீட்டில் வசித்­து­வ­ரு­வ­துடன் விவ­சாயம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.