நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக சேதமடைந்துள்ள தனியார் மற்றும் அரச சொத்துக்ககளுக்கு  இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இது  தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக    அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே  ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டை செய்த பின்னர் அவற்றுக்கு  இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு  பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி தேசிய கொள்கைள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார    அமைச்சின் கீழ்  வருகின்ற  இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக    சேதங்களுக்கு  இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.