முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் சென்ற நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குரிய காப்புறுதிப்பத்திரம் காலாவதியாகியதால் அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தவதற்கு விடுமுறை தினமான (04.05.2019) சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு முள்ளியவளை போக்குவரத்துப் பொலிசாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவமானது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த  22.04.2019 அன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வீதியில் சென்ற நபர் ஒருவரை வழிமறித்த போக்குவரத்துப் பொலிஸார் வாகன அனுமதிப்பத்திரங்களை பரிசோதித்தபோது குறித்த மோட்டார் சைக்கிளின் வாகனக்காப்பறுதிப்பத்திரம் காலாவாதியாகியுள்ளது தெரியவந்துள்ளது 

இந்நிலையில் அதற்காக முள்ளியவளை போக்குவரத்துப் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு 04.05.2019 சனிக்கிழமை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை விடுமுறை தினத்தில் போக்குவரத்துப் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் பொலிசாரின் கடமை நடவடிக்கையை மீறிய செயற்பாடாக அமைந்துள்ளதாகவும் இவ்வாறான போக்குவரத்துப் பொலிசாரின் நடவடிக்கையில் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்திய சம்பவமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.