வெசாக் தினத்தில் தேவையற்ற களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள்!

Published By: Vishnu

06 May, 2019 | 08:33 PM
image

கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற கொடூர தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் உள உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனச் சாந்தி வேண்டி புன்னிய கருமங்களில் ஈடுபட வேண்டும் என்பதுடன் புனித வெசாக் தினத்தில் தேவையற்ற களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்படி வேண்டுகோளை மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த, சுமங்கள, அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஞானரத்ன, அமரபுர நிகாயாவின் மகாநாயக்கத் தேரர் வண. கொட்டுகொட தம்மாவாச, ராமன்ய நிகாயாவின் மகாநாயக்க தேரர் நாப்பான பேமசிரி ஆகியோர் ஒன்றிணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வெசாக் தினம் என்பது உலக பௌத்தர்களுக்கு மிக முக்கிய தினமாகும். இது கௌத்தம புத்தரின் பிறப்பு, புனித துறவரம் அடைதல், பரிநிர்வாணமடைதல் போன்ற நிகழ்வுகள் நடந்த தினமாகும்.

கடந்த 21ம் திகதி இடம் பெற்ற தாக்குதல் காரணமாக மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சித்த சக்தி கிடைக்க வேண்டும் என பிராத்திக்க வேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது. 

துவேசம், பயம், மோகம் போன்ற துர்குணங்களைத் தவிர்ந்து கருணை, காருன்யம், அன்பு போன்ற நற்குணங்களை உருவாக்கும் எதிர்பார்க்கை பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமய சிந்தனை ஆத்மீகம் தொடர்பான நடவடிக்கைளில் அமைதியாக ஈடுபடுவதுடன் பொது சனங்களை ஒன்று திரட்டும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33